14 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வகைசெய்யும் சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும். குழந்தைகளுக்கான நீதிமன்றங்களுக்குத் தனியாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு குழந்தைகள் உரிமை பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான போலீஸ் யூனிட்டுகளை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. 18 வயதுக்கு உள்பட்டவர்கள் குழந்தைகள் என்று இருப்பதை 16 வயதுக்கு உள்பட்டவர்கள் குழந்தைகள் என்று சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் கருத்தரங்கில் கோரப்பட்டது.
கருத்தரங்கில் குழந்தைகள் உரிமை வாரிய உறுப்பினர் சமூக சேவகி சுஜாதா சீனிவாசன், குழந்தைகள் உரிமை மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் தாமஸ் ஜெயராஜ், துணை இயக்குநர் தேன்பாண்டியன், இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் அறங்காவலர் வழக்கறிஞர் மார்ட்டின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திவாகரன், தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன் உள்ளிட்டோர் பேசினர். இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் வரவேற்றார். செல்வம் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக