சிதம் பரம், டிச.7:
கொடிநாள் நிதி சேகரிப்பு
சிதம்பரத்தில் ஊர்க்காவல்படை சார்பில் கொடிநாள் நிதி சேகரிப்பு தொடக்க விழா கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.÷நிகழ்ச்சியை கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட தளபதி ஆர்.கேதார்நாதன் முதல் நிதியை அளித்தார்.÷இந்நிகழ்ச்சியில் கோட்டத் தளபதி ஆர்.கோவிந்தராஜன், படைத் தளபதி எஸ்.அந்தோணிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
கடலூர் கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் சிதம்பரம் ஹோட்டல் சாரதாராம் தர்பார் ஹாலில் தலைமை ஆசிரியர்களுக்கு சாரணியம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.÷இக் கருத்தரங்கில் 125 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் சி.எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். சாரணிய ஆணையர் கா.காவேரி முன்னிலை வகித்தார். பயிற்சி ஆணையர் துரை.ராமலிங்கம் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவள்ளி கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசுகையில் அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் சிறப்பாக நடைபெற தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
குழும வளர்ச்சி திட்ட கூட்டம்
செப்பு, கவரிங் நகை தொகுப்பு நிறுவனங்களின் குழும வளர்ச்சி திட்டம் குறித்த முதன்மைக் கூட்டம் சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.÷தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் ஆகியவை இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
சங்க மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்தார். தொழிற்சங்க மாநில செயலர் ஆர்.ராமச்சந்திரன் வரவேற்றார். க டலூர் மாவட்ட தொழில் மைய முதுநிலை மேலாளர் ராஜகணேஷ், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் என்.கபிலன், விலை மதிப்பு மேலாண்மை ஆலோசகர் சென்னை ஆர்.வாசுதேவன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர்.
சி தம்பரத்தில் செப்பு, கவரிங் நகை தொழில் முனைவோர்கள் வாழ்க்கை தரம் உயரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மூலம் அத்தொழில் சார்ந்த முனைவோர்களை ஒருங்கிணைத்து செப்பு, கவரிங் நகை தொகுப்பு நிறுவனங்களின் குழுமம் ஒன்றை உருவாக்குவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நகரச் செயலர் பி.முத்துக்குமார், பொருளாளர் எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில இளைஞரணி செயலர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக