10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர் அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே சாதிச்சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு உடனே விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆட் சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 24,344 மாணவ மாணவிருக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்காத 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக