உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

பள்ளி மாண​வர்​க​ள் செல்​போன் பேச தடை

கடலூர்,​ டிச. 5:​ 

                         பள்ளி மாணவ,​ மாண​வி​யர் செல்​போன்​களை பயன்​ப​டுத்​தத் தடை விதிக்க வேண்​டும் என்று கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்த குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றத்​தில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது. பள்ளி நேரங்​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளுக்​கும்,​ பள்ளி வாகன ஓட்​டு​நர்​க​ளுக்கு வாக​னத்தை இயக்​கும்​போ​தும் செல்​போன் பயன்​ப​டுத்த தமி​ழக அரசு தடைச் சட்​டம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றம் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யது. ​

              பொ​யட்ஸ் தொண்டு நிறு​வ​னம்,​ பி.எம்.எஸ்.எஸ். தொண்டு நிறு​வ​னம்,​ புது​யு​கம்,​ கரு​ணை​வி​ழி​கள்,​ மனுஷி உள்​ளிட்ட பல்​வேறு தொண்டு நிறு​வ​னங்​கள் சார்​பில் சனிக்​கி​ழமை கட​லூ​ரில் குழந்​தை​கள் உரிமை தின விழா மற்​றும் குழந்​தை​கள் பேரணி நடந்​தது. ​

              வி​ழாவை யொட்டி பள்ளி மாணவ,​ மாண​வி​யர் கலந்​து​கொண்ட பேரணி,​ பெரி​யார் சிலை அரு​கில் இருந்து புறப்​பட்டு விழா நடை​பெற்ற டவுன்​ஹா​லில் முடி​வ​டைந்​தது. பேர​ணியை கட​லூர் சட்​டப்​பே​ரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன் தொடங்கி வைத்து குழந்​தை​க​ளு​டன் நடந்து வந்​தார். ​

               ட​வுன்​ஹா​லில் நடந்த நிகழ்ச்​சி​க​ளுக்கு பொயட்ஸ் தொண்டு நிறு​வன நிர்​வாக இயக்​கு​நர் பெ.சாமி​நா​தன் தலைமை தாங்​கி​னார். சி அறக்​கட்​டளை இயக்​கு​நர் டெய்சி வர​வேற்​றார். குழந்​தை​கள் நாடா​ளு​மன்ற அமைச்​சர்​க​ளுக்கு மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் எஸ்.அமு​த​வல்லி பத​விப் பிர​மா​ணம் செய்து வைத்து உரை நிகழ்த்​தி​னார். குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றக் கண்​காட்​சியை அய்​யப்​பன் எம்.எல்.ஏ. பார்​வை​யிட்​டார். ​

               அ​தைத் தொடர்ந்து குழந்​தை​கள் நாடா​ளு​மன்ற நிகழ்ச்சி நடந்​தது. இதில் பல்​வேறு பிரச்​னை​கள் விவா​திக்​கப்​பட்டு தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

                 காலை, ​ மாலை வேலை​க​ளில் மாண​வர்​க​ளுக்கு சிறப்​புப் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்​டும். உரிய பஸ் நிறுத்​தங்​க​ளில் பஸ்​களை நிறுத்த வேண்​டும். பஸ் ஓட்​டு​நர்​கள் மற்​றும் நடத்​து​நர்​கள் பள்ளி மாணவ,​ மாண​வி​யரை கண்​ணி​யத்​து​டன் நடத்​து​மாறு மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் அரசு போக்​கு​வ​ரத்​துத் துறை அலு​வ​லர்​கள் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​ பள்ளி மாண​வர்​கள் செல்​​போ​னைப் பயன்​ப​டுத்​தத் தடை விதிக்க வேண்​டும். பள்ளி நேரங்​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளும்,​ பள்ளி வாகன ஓட்​டு​நர்​கள் வாக​னங்​களை ஓட்​டும் போது செல்​போன் பயன்​ப​டுத்த தமி​ழக அரசு தடை​வி​திக்க வேண்​டும். குழந்​தை​கள் ஊட்​டச்​சத்து மையங்​கள்,​ சத்​து​ணவு மையங்​க​ளில் சரி​யான முறை​யில் சுகா​தா​ர​மான உணவு வழங்க வேண்​டும். திரைப்​ப​டங்​கள்,​ தொலைக்​காட்சி,​ விளம்​ப​ரங்​க​ளில் குழந்​தை​க​ளைத் துன்​பு​றுத்​தும் காட்​சி​க​ளுக்​குத் தடை விதிக்க வேண்​டும் என்​றும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

                    தொ​ டர்ந்து குழந்​தை​க​ளின் கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன. நாடா​ளு​மன்ற இணைய ஆலோ​ச​கர் கல்​பனா,​ நாடா​ளு​மன்ற கூட்​ட​மைப்​பின் அமைப்​பா​ளர் கிறிஸ்​டோ​பர்,​ வெல்த்​துங்​கர் ஹில்பே தொண்டு நிறு​வன இயக்​கு​நர் முனை​வர் ஆறு​மு​கம்,​ பொயட்ஸ் இயக்​கு​நர் திரி​வேணி,​ பி.எஸ்.ஜி. தொண்டு நிறு​வ​னச் செய​லா​ளர் தாம​ரைச்​செல்​வன்,​ ​ கேர் இந்​தியா மாவட்ட ஒருங்​கி​மைப்​பா​ளர் மோசஸ் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior