கட லூர், டிச. 5:
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சோதனை தீவிரமாக நடைபெற்றன. இதில் பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தவர்கள் உள்ளிட்ட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை இரவு இந்த மாவட்த்தில் உள்ள 21 சோதனைச் சாடிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. விடுதிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட போலீஸôர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். பிடிவாரண்ட் நிலுவையில் இருந்த குற்றவாளிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட 4 பேர், சாராய வழக்குகளில் தேடப்பட்ட 21 பேர், மேலும் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டிய 41 பேர், அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய 9 பேர் மீதும் போதிய அவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டிய 200 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில், விருத்தாசலம் விருத்தகீரீஸ்வர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில், திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பிரபலமான கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக