கடலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் திங்கள்கிழமை இணைந்து நடத்திய மறியல் போராட்டத்தில் 1,700 பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேணடும், பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும், சமையல் கேஸ் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து கடலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தின.
கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகே மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் சுப்புராயன், இந்தியக் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் சம்பந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் செ.தனசேகரன், ஒன்றியச் செயலர் மாதவன், சிப்காட் செயலர் ஆளவந்தார், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.மணிவாசகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.விஸ்வநாதன், வட்டத் துணைச் செயலர் இ.பாலகிருஷ்ணன், நகரச் செயலர் வி.குளோப், வட்டக் குழு உறுப்பினர் ஜி.வீரப்பன், கடலூர் நகரத் தலைவர் என்.ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ம றியலில் ஈடுபட்ட 243 பேர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, ஆகிய ஊர்களிலும் மறியல் போராட்டங்கள் நடந்தன. மாவட்டத்தில் 1700 பேர் கைது செய்யப்பட்டதாக, போலீஸôர் தெரிவித்தனர்.
சிதம்பரத்தில் ...
சிதம்பரம், டிச. 7: அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து சிதம்பரத்தில் சாலை மறியல் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தியது.÷காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெற்கு ரத வீதி இந்தியன் வங்கி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரச் செயலர்கள் ஆர்.ராமச்சந்திரன், எஸ்.காசிலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.÷மா வட்ட செயற்குழு உறுப்பினர் வி.எம்.சேகர், மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், மாவட்டக்குழு உறுப்பினர் வி.நடராஜன் மற்றும் 68 பெண்கள் உள்ளிட்ட 321 பேரை நகர போலீஸôர் கைது செய்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நெய்வேலியில்...
நெய்வேலி, டிச. 7: விலைவாசி உயர்வைக் கண்டித்து மந்தாரக்குப்பம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 102 பேர் கைதாகினர்.÷அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசின் போக்கைக் கண்டித்து நெய்வேலி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மந்தாரக்குப்பம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே நெய்வேலி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் திருஅரசு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துவேல், இணைச் செயலர் சங்கிலிப்பாண்டியன்,நெய்வேலி சிஐடியு தலைவர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 102 பேரை மந்தாரக்குப்பம போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக