கடலூர், டிச.8:
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைப் பெற்றோர் முற்றுகையிட்டனர். ÷குமராட்சி ஊராட்சி ஒன்றியம் பூலாமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 134 மாணவர்கள் படிக்கிறார்கள். 2 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நியமிக்கப்பட வில்லை.
எ னவே செவ்வாய்க்கிழமை பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்குழு உறுப்பினர் வடிவேல் தலைமையில் பள்ளியை இழுத்து மூட முயன்றனர்.
போலீஸôருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் வந்துவிடவே, பள்ளியை மூடும் முயற்சி கைவிடப்பட்டது.
எனினும் பள்ளியை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகயை வலியுறுத்தினர். மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். அவர்களுடன் சிதம்பரம் வட்டாட்சியர் தனவந்தகிருஷ்ணன் மற்றும் போலீஸôர் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக