கடலூர், டிச.8:
சொத்துத் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகளுக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.
குறிஞ் சிப்பாடியை அடுத்த கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (55). அவரது மகள் சத்தியா (22). சத்தியாவை கல்குணத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் கனகவேலுக்குக் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர்.
திருமணம் ஆன சிறிது நாளில் கனகவேல் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.
எ னவே பாலு அவரது மனைவி உஷாராணி (50), மகள் சத்தியா ஆகியோர் சேர்ந்து கனகவேலுவின் வீட்டுக்குச் சென்று, சொத்தில் ஒரு பகுதியை சத்தியாவுந்க்கு எழுதி வைக்குமாறு வேலாயுதத்தின் குடும்பத்தினரை வற்புறுத்தினர்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வேலாயுதத்தின் மனைவி அமுதா (50) எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் 14-1-2009 அன்று நடந்தது. கொலை தொடர்பாக பாலு, உஷாராணி, சத்தியா ஆகியரை குறிஞ்சிப்பாடி போலீஸôர் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அசோகன் விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்புக் கூறினார்.
குற் றம் சாட்டப்பட்ட பாலு, சத்தியா ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தார். குற்றம் நிரூபிக்கப்படாததால் உஷாராணி விடுதலை செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக