சிதம்பரம், டிச. 6:
சிதம்பரம் ஹோட்டல் சாரதாராமின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிதம்பரம் பள்ளிகளுக்கு இடையேயான திறமைக்கோர் திருவிழா என்ற பெயரில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நடனப் போட்டி, குழுநடனப் போட்டி, சிறுவர்கள் பாடல் போட்டி, மாறுவேடப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட 6 விதமான போட்டிகள் நடைபெற்றன. 15க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் குருஞான சம்பந்தர் பள்ளி மாணவி ஆர்.அபிராமி (சிறுவர்கள் பாடல் போட்டி), எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளி எஸ்.ஹரித்ரா (பாம்பு நடனம்), வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்.பிரியங்கா (பரத நாட்டியம்), காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவியர்கள் (குழு நடனம்) ஆகியோர் பரிசுகள் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் வரவேற்றார். அரிமா சங்கத் தலைவர் செந்தில்வேலன், சண்முகசுந்தகம், இளையகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.
போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற காமராஜ் மெட்ரிக் பள்ளிக்கு சாரதாராம் கோப்பை-2009 வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேலாளர்கள் முத்துவேல். ராஜசுந்தரம், சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக