கட லூர், டிச. 8:
கடலூர் மாவட்ட இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் உடல் ஊனமுற்றோர் உபகரணங்கள் பெறுவதற்காக புதன்கிழமை (இன்று) கடலூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலரை அணுகலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.
இது குறித்து ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குள் ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அகதிகள் முகாம்களில் உள்ள உடல் ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.÷எனவே அகதிகள் முகாம்களில் உளள ஊனமுற்றோர், ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை வைத்து இருப்பின், அத்துடன் அகதிகள் முகாம் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் விண்ணப்பத்துடன் கடலூர் புதுப்பாளையத்தில உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்தை புதன்கிழமை (டிசம்பர் 9) காலை 10 மணிக்கு அணுகலாம்.
தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை இல்லாதவர்கள், அதே அலுவலகத்தை அணுகிóப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக