சிதம்பரம், டிச. 7:
சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பட்டா மாற்றம் மற்றும் புலஎல்லை அளக்கக்கோரி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளவற்றுக்கு தீர்வு காண செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 8) பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிதம்பரம் வட்டம், திருவக்குளம் குறுவட்டத்தில் ஏற்கெனவே மனு அளித்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கிரயப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆஜராகி தங்களது மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைக்கலாம் என சிதம்பரம் வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக