கடலூர், டிச.7:
மின் வாரியத்தைக் கண்டித்து பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
பண்ருட்டி வட்டம் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பூண்டி ஊராட்சி குச்சிப்பாளையம் கிராமத்தில் மின்கம்பங்களுக்கு இடையே உள்ள கம்பிகள் 50 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருப்பதால், எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர். மேலும போதிய மின் அழுத்தம் இல்லாததால் பல நேரங்களில் இக்கிராமம் இருளிóல் மூழ்கிக் கிடக்கிறது.
கட்டமுத்துப்பாளையம் ஆற்றுத் தெருவில் 30 வீடுகள் உள்ளன. அவற்றில் 13 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதி வீடுகளுக்கு பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும் மின் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும், மின்கம்பிகளை மாற்ற வேண்டும், மின் அழுத்தம் சீராக இருக்க வேண்டும் எனகோரி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.÷ ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பெ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக