கடலூர், டிச.7:
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி திங்கள்கிழமை பினாயில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், தேர்குணம் கிராமம் மாரியம்மன் கோயிóல் தெருவைச் சேர்ந்த பூங்காவனத்தின் மகன் பாலு (26). கிளியனூர் போலீஸ் சரகத்தில் நடந்த கொலை வழக்கில் பாலுவுக்கு 2006-ல் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.÷இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிறைச்சாலை வளாகத்தில் மயங்கிக் கிடந்தார். கழிவறையை சுத்தம் செய்ய வைத்து இருந்த பினாயிலை அவர் குடித்ததைத் தொடந்து அவர் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரைக் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலு இறந்தார்.
அரசு மருத்துவமனையில் கடலூர் கோட்டாட்சியர் செல்வராஜ் முன்னிலையில் பாலுவின் பிரேதப் பரிசோதனை நடந்தது. கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பாலு இருந்திருக்கிறார். எனவே அவரது பெற்றோருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும என்று மனுவில் கோரியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக