கடலூர் :
பிளஸ் 2 தேர்வு இன்று துவங்குவதையொட்டி திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் நுழைவுச்சீட்டு மற்றும் பேனா வைத்து வழிபட்டனர்.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் எதிரில் மலை மீது உள்ள ஹயக்கிரீவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். இன்று துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி நேற்று திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி, தேன் மற்றும் கற்கண்டு கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். பலர் தங்களது தேர்வு அறை நுழைவுச் சீட்டு, தேர்வு எழுதுவதற் காக வாங்கிய புதிய பேனாக்களை வைத்து பூஜை செய்தனர். சிலர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி கோவில் வளாகத்தில் தங்களது தேர்வு எண்களை எழுதி வைத்தனர். இதன் காரணமாக நேற்று காலை திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக