பரங்கிப்பேட்டை :
மாசிமக திருவிழாவில் கடல் அலையில் சிக்கிய பேத்தியை காப்பாற்ற முயன்ற தாத்தா மூச்சி திணறி இறந்தார்.
சிதம்பரம் அடுத்த கஸ்பா ஆலம்பாடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (48). நேற்று பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கடற்கரையில் மாசிமக திருவிழாவில் கலந்துகொள்ள தனது மகள்கள் புனிதா, பராசக்தி, பேத்தி பைரவி ஆகியோருடன் சென்றார். அங்கு கடலில் குளித்த அவரது பேத்தி பைரவி அலையில் சிக்கினார். அதைப் பார்த்த சக்கரவர்த்தி, பேத்தி பைரவியை காப்பாற்ற கடலில் இறங்கினார். அப்போது அலை இழுத்து சென்றதில் மூச்சுத்திணறி சக்கவரவர்த்தி இறந்தார். அலையில் சிக்கிய பைரவி அலையின் வேகத்தில் கரைக்கு வந்துவிட்டார். தண்ணீர் அதிகமாக குடித்து மயங்கிய பைரவி, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல்(55). இவர் நேற்று தனது தம்பியுடன் கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடந்த மாசி மகத் திருவிழாவிற்கு வந்தார். பின்னர் இருவரும் பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றபோது முருகவேல் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந் தார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக