உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

டி.இ.சி., மாத்திரை வழங்கும் பணி : எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார்


கடலூர் : 

                கடலூர் அடுத்த கோண் டூர் ஊராட்சியில் யானைக் கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கிவைத்தார்.
             மாவட்டத்தில் யானைக் கால் நோயை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறை சார்பில் 22 லட்சம் பேருக்கு டி.இ.சி., மற்றும் அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி நேற்று நடந்தது. கடலூர் அடுத்த கோண்டூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுஜாதா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரூபாதேவி வரவேற் றார். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ளும் முறையை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீரா விளக்கினார்.
            
              யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரையை வீடு, வீடாக சென்று வழங்கிட களப்பணியாளர்களிடம் மாத்திரைகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுரேஷ், சுஜாதா, சுகாதார ஆய் வாளர் கோவிந்தன், ஒன் றிய கவுன்சிலர் மணிமொழி  பங்கேற்றனர்.

மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் பாஸ்கரன் கூறுகையில்:, 

                  டி.இ.சி., மாத்திரைகள் 2 முதல் 5 வயதினர் ஒன்றும், 6 முதல் 14 வயதினர் இரண்டும், 15 முதல் 60  வயதினர் மூன்று உட்கொள்ள வேண்டும். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்குமேற்பட்டவர், இருதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் உட் கொள்ளக்கூடாது. மாத்திரைகளை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒரு சிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு, வாந்தி போன்றவை ஏற்பட்டால் அது அவர்களின் உடலில் உள்ள உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப் படுவதன் விளைவேயின்றி அச்சப்படதேவையில்லை என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior