உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்கத்தினர் வரும் 21ம் தேதி பட்டினி போராட்டம்

கடலூர் : 

                 கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டபடி 14 சதவீதம் சம்பள உயர்வு வழங்கக்கோரி வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்துவதென ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
 
                  கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் சங்க நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடந்தது. பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                   கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 10 ஆண்டாக சம்பள உயர்வு வழங்காத நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஊழியர் சங்கத்துடன் நிர்வாகம் இறுதிச் சுற்று பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் 1.7.09 முதல் 14 சதவீதம் சம்பள உயர்வு வழங்க ஒப்புக் கொண்டதை இதுவரை வழங்காமல், நிர்வாகம்  காலதாமதம் செய்கிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 2 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்சமயம் 1050 ஊழியர்களும் கூடுதல் சுமையுடன் பணிபுரிகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 150 ஊழியர்களை பணி நியமனம் செய்யாமல் தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. இதனைக் கண்டித்தும், விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி சென்னையில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior