விருத்தாசலம் :
விருத்தாசலத்தில் பெருகி வந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். இடிக்கப்பட்ட சிமென்ட் கட்டைகளை அகற்றாமல் சாலையிலேயே குவித்து வைத்திருப்பதால் போக் குவரத்து நெரிசல் நீடித்து வருவதோடு, மீண்டும் சாலைகள் மெல்ல, மெல்ல ஆக்கிரமிக்கப் பட்டு வருகிறது.
விருத்தாசலம் நகரின் முக்கிய வீதிகளான ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு, கடைவீதிகளில் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் உள்ளன. நகரம் மற்றும் சுற்றியுள்ள 100 ம் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் விருத்தாசலத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்கி சென்று வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலைகளில் மக்கள் கூட் டம் நிறைந்தே காணப்படும்.
இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகள் பொதுமக்கள் நிழலில் நின்று பொருட்கள் வாங்குவதற்காக கடைகளின் முன் முதலில் "ஷெட்' அமைத் தும், பின்னர் சிமன்ட் தளம் அமைத்தும் சாலையை ஆக்கிரமித் தனர். கடைகளில் பொருள் வாங்க வருபவர்கள் தங் களது வாகனங்களை அந் தந்த கடைகளின் முன் நிறுத்திவிடுகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத் திவிட்டு செல்வதால் சாலை குறுகலாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பாதிப்பை சரி செய்திட பிரதான சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் நகர மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி இரண்டு வாரங்களுக்கு முன் நகராட்சி ஒத்துழைப்புடன் நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர். கடைவீதியில் துவங்கி ஜங்ஷன்ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆறு நாட்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கடைகள் முன்பு அமைத்திருந்த ஷெட் களை பெரும்பாலான வியாபாரிகள் அவர் களாகவே கழற்றி கொண்ட நிலையில், அவர்கள் அமைத்திருந்த சிமென்ட் கட்டைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து தள்ளினர்.
அவ்வாறு இடித்து தள்ளிய சிமென்ட் கட்டைகளை உடனடியாக அகற்றாமல், தங்கள் வேலை முடிந்தது என நெடுஞ்சாலை துறையினர் சென்றுவிட்டனர். நகராட்சியினரும் இது தங்கள் வேலை இல்லை என ஒதுங்கி கொண்டனர். பெரும்பாலான இடங்களில் இடிக் கப்பட்ட சிமென்ட் கட்டைகள், தோண்டப்பட்ட மண் சாலை ஓரத்தில் அப்படியே கிடக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஒரு வாரத்திலேயே சில வியாபாரிகள் தற்போது மீண் டும் தங்கள் கடைகளுக்கு முன் தற்காலிக ஷெட் அமைக்க துவங்கி விட்டனர். அங்கொன்றும் இங் கொன்றுமாய் தொடங்கி அனைத்து வியாபாரிகளும் விரைவில் தங்கள் கடைகளின் முன்பு தற்காலிகமாக தார்பாய் கொண்டு கொட்டகை அமைத்து வருகின் றனர். சில மாதங்களில் அதை நிரந்தர ஷெட்டாக அமைத்து மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து விடுவர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்பு பணியை சம்பிரதாய நடவடிக்கையாக மேற்கொள்ளாமல் நிரந்தர தீர்வு காண முன்வரவேண்டும்.
சாலையின் இருபுறங்களிலும் எல்லையை குறிப்பிட்டு வியாபாரிகள் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் வியாபாரிகள் ஆக்கிரமிக்காதவாறும், பொதுமக்கள் பயனடையும் வகையிலும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் அமைக்க முன்வர வேண்டும். அதுபோல் சாலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி சாலையின் ஓரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக