உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

வயலில் மாடு மேய்ந்த தகராறு : கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை

பரங்கிப்பேட்டை : 

                  சிதம்பரம் அருகே வயலில் மாடு மேய்ந்த தகராறில் மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 
                சிதம்பரம் அடுத்த தீர்த்தனகிரி கிராமத்தில் கலியமூர்த்தி என்பவருக்கு சொந் தமான வயலில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மங்கை என்பவரின் மாடு மேய்ந்துவிட்டது. இதை அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் தட்டிகேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ராஜேந்திரன் தகராறு செய்தது குறித்து தனது கணவர் சங்கரிடம் மங்கை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். ராஜேந்திரன், அவரது சகோதரர்கள் இளவரசன், பழனிவேல் ஆகியோர் சேர்ந்து சங்கரை தாக்கினர். அதனை தடுக்க வந்த சங்கரின் பாட்டி செல்லபாங்கி (72)யின் தலையில் கட்டையால் தாக்கினர். படுகாயமடைந்த செல்லபாங்கியை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து ராஜேந்திரனை (40) கைது செய்தனர். இளவரசன், பழனிவேலை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior