விருத்தாசலம் :
விருத்தாசலம் அருகே மாசிமகத்திற்கு பொதுமக்களை ஏற்றிச் சென்ற மினிடோர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பெண்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சி.கீரனூர், மருங்கூர், மேலப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் நேற்று விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் நடந்த மாசி மக திருவிழாவிற்கு மினிடோர் வேனில் புறப்பட்டனர். வேனை, கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (21) ஓட்டி வந்தார். விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எதிரே வேன் வந்தபோது, நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் மணிகண்டன், வேனில் பயணம் செய்த சேட்டு (32) வேல்முருகன் (38) ஆறுமுகம் (45) ராஜேந்திரன் (40) கலியபெருமாள் (70) பத்மினி (42) கொளஞ்சி (70) ராதிகா (16) உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களை கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் படுகாயமடைந்த முருகேசன் (70) சுப்புராமன் (60) பாஸ்கர்செல்வம் (30) பெரியநாயகி (45) தனக்கொடி (51) ஆகிய ஐந்து பேரும் மேல்சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக