உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

விருத்தாசலம் அருகே அம்பேத்கர் சிலை பழைய இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது

விருத்தாசலம் : 

              பழையப்பட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை,  ஐகோர்ட் தீர்ப்பை அடுத்து மீண்டும் பழைய இடத்தில் அமைத்து கலெக்டர் தலைமையில் நேற்று திறக் கப்பட்டது.
 
                கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத் தில் நூலகம் அருகில் அனுமதியின்றி ஓராண் டிற்கு முன் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த இரு (ஆதிதிராவிடர்-முஸ்லீம்) சமுதாயத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ம் தேதி வெண் மணி தியாகிகள் தினத் தன்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிரச்னைக்குரிய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன் றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப் போது அதிகாரிகள் ஒரு மாதத்தில் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். அதன்பின் சிலைக்கு மாலை அணிவிக்கலாம் என்றனர்.
 
                     சிலையை வேறு இடத் தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு தடை விதிக்க கோரி அதே ஊரைச் சேர்ந்த ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் அமிர்தலிங்கம் சென்னை ஐகோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கடந்த ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு திடீரென வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை வேறு இடத்தில் நிறுவினர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் கடந்த 11ம் தேதி அளித்த தீர்ப்பில் சிலையை மாற்றி அமைத் ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.  இம்மாத இறுதிக்குள் பழைய இடத்தில் மீண்டும் சிலையை நிறுவி கலெக்டர், எஸ்.பி., முன் னிலையில் திறப்பு விழா நடத்தவேண்டும் என தீர்ப்பளித்தனர். அதனையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம்  அம்பேத்கர் சிலையை பழைய இடத்திலேயே நிறுவினர். நேற்று காலை 9.30 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் முன்னிலையில் வாலிபர் சங்க மாநில செயலாளர் கண்ணன், துணை செயலாளர் வேல்முருகன், மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் தனசேகரன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அசோகன், செயலாளர் ராஜேஷ்கண்ணன், வக்கீல் திருமூர்த்தி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  பின்னர் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தனித்தனியே சிலைக்கு மாலை அணிவித்தனர். சிலை திறப்பு விழாவையொட்டி பழையபட்டினம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior