உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

சிலிண்டர் வினியோகம் முறைப்படுத்தப்படும் : மாவட்ட வழங்கல் அலுவலர் தகவல்

பண்ருட்டி : 

                 காஸ் சிலிண்டர் வினியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர்  கூறினார்.
 
                    பண்ருட்டி தாலுகாவில் காஸ் நுகர்வோர்களின் குறைகள் களைவதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, கண்காணிப்பாளர் கோவிந்த், வட்ட வழங் கல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காஸ் ஏஜென்சியினர் நுகர்வோர்களை தரக்குறைவாக பேசுவது, 25 நாள் கழித்து பதிவு செய்த பின் 15 நாள் கழித்து சிலிண்டர் வழங் குவது, இணைப்புக்கு கூடுதல் கட்டணம் மற் றும் எண்ணெய் உள்ளிட் டவை வாங்க வற்புறுத்துவது, வீடுகளுக்கு டெலிவரி செய்யாதது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர்கள் பேசினர். இதற்கு பதிலளித்த மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ்,  காஸ் ஏஜென்சிகள்  நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காலவரையறை சரிவர பின்பற்றவில்லை. மேலும் நுகர்வோர்களிடம் அணுகுமுறை குறைவாக உள்ளது. நுகர் வோர்கள் காஸ் அடுப்பு உள்ளிட்ட பொரு ட்களை   ஏஜென்சியிடம் வாங்க வேண்டியதில்லை. சிலிண்டருக்கு "பில்'லில் குறிப்பிட்ட தொகை வழங்கினால் போதும். சீரான சிலிண் டர் விநியோகம் உள்ளிட்ட நுகர்வோர் கோரிக் கைகள் களைவதற்கு பாரத் காஸ் நிர்வாக அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்றார். இதில் ஜெயா காஸ் உரிமையாளர் பிரபுராஜ், ராதா காஸ் மேலாளர், நிலவரித் திட்ட தாசில்தார் பன்னீர் செல்வம், விவசாயிகள் சங்க பிரதிநிதி வேங்கடபதி, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், த.மு.மு.க.,செயலாளர் ஷேக்தாவூத், ராஜவேல், நாமதேவ் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior