உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

ரயில்வே மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும் மின்விளக்கின்றி இருண்டு கிடக்கும் அவலம்


சிதம்பரம் : 

                  சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும் விளக்கு போட யாரும் அக்கறை காட்டாததால்  இருண்டு கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
                 கடலூர் மாவட்டம், சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே 18 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திறக்கப்பட்டது.  பொதுமக்களின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கிடையே கட்டப்பட்ட இப்பாலம், அண்ணாமலைப் பல்கலை மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள், மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. பாலம் திறக்கப்பட்டு இன்றுடன் (25ம் தேதி) ஓராண்டு நிறைவடைந்தும் கூட, பாலத்தில் விளக்கு போட அரசு அதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ அக்கறை எடுத்துக்கொள்ளாதால் இன்றுவரை "இருட்டு பாலமாகவே' இருந்து வருகிறது. இரவு நேரங்களில் பாலம் இருளில் மூழ்கிவிடுவதால் பாலம் வழியாக செல்வதற்கே அஞ்ச வேண்டிய நிலை உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட பாலத்தில் நிதி போதவில்லை என்ற காரணத்தால் விளக்குபோடப்படவில்லை.  

                       இதற்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திடம் பொறுப்பை ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கான முயற்சியில் இறங்க கூட யாரும் இதுவரை அக்கறை காட்டவில்லை.  எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் பாலத்தில் அச்சமின்றி செல்லவும், விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் பாலத்தில் மின்விளக்கு போட நடவடிக்கை வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்பார்ப்பாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior