உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

கடலூரில் மாசி மகத் திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்

கடலூர் : 

                  கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று நடந்த மாசி மக விழாவில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உள்ளிட்ட  நூற் றுக்கு மேற்பட்ட சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
                   கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று மாசி மகம்  திருவிழா நடந்தது. காலை 7 மணிக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், கடலூர் வரதராஜ பெருமாள், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமிகள், குணமங்கலம் மாரியம்மன் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்ட  கோவில் களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மேளதாளம், பேண்டுவாத்தியம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேவனாம்பட்டினம் கடலில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பலர் கடலில் நீராடி இறந்த தங்களது மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். மாசி மக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  மாசி மகத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேவனாம்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரி முடிந்த பின் திருக்கோவிலூர் உலகலந்த பெருமாள் நேற்று மதியம் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நாயுடு பள்ளி வளாகத்தில் மண்டகபடியும், இரவு திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior