உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 01, 2010

பார்வையற்ற, உடல் ஊனமுற்ற மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத கூடுதல் நேரம்

கடலூர் : 

                  இன்று துவங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் மாவட் டத்தில் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வெளி மாவட்ட ஆசிரியர்களும் பறக்கும் படை பணியில் ஈடுபடுகின்றனர்.
           பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 9,356 மாணவர்கள், 10 ஆயிரத்து 488 மாணவிகள், விருத்தாசலம் கல்வி மாவட்டத் தில் 5,323 மாணவர்கள், 4,361 மாணவிகள் என கடலூர் வருவாய் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 679 மாணவர்களும், 14 ஆயிரத்து 849 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 528 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடலூர் கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத் தில் 22  என மொத்தம் 61 மையங்களில் தேர்வு நடக்கிறது.
               தனித் தேர்வர்கள் கடலூர் கல்வி மாவட்டத்தில் 1,063 மாணவர்கள், 579 மாணவிகள், விருத்தாசலத்தில் 1,408 மாணவிகள், 886 மாணவிகள் என வருவாய் மாவட் டத்தில் 3,936 பேர் 12 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். பார்வையற்ற மாணவர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்  பள்ளியில் 8 பேரும், வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 2 பேரும், முதுநகர் செயின்ட் டேவிட் பள்ளியில் 4 பேர் என 14 பேரும், உடல் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சொல்வதை எழுதுவது ("ஸ்கிரைப்') 11 மையங்களிலும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு ஒன்னரை மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் 61 துறை அலுவலர் கள், 74 கூடுதல் துறை அலுவலர் கள், 1,500 அறை கண்காணிப் பா ளர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர்.
                              மேலும் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க் கள் தலைமையில் ஒவ்வொரு குழுவிற்கும் 5 ஆசிரியர்கள் கொண்ட 9 பறக்கும் படையினரும், பிரச்னைக்குரிய மையங்களுக்கு 3 சிறப்பு படை மற்றும் அந்த மையங்களில் நிரந்தர படையும் நிறுத்தப்படுகிறது. மேலும்  இணை இயக்குனர் தலைமையில் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கலெக்டர்,  எஸ்.பி.,  டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ.,க்கள்,  தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காப்பியடித்து பிடிபடுபவர்கள் 16 தலைப்புகளின் கீழ் அந்தந்த குற்றங்களுக்கு தக்கவாறு தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior