உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

20 ஆண்டுகளாக தூர்வாராத பாசன வாய்க்கால்: உவர்ப்பாக மாறும் நீர் கருகும் நெற்பயிர்கள்


சிதம்பரம்:

                         சிதம்பரம் அருகே 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு வடிகாலாகவும், 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கு பாசன வாய்க்காலாகவும் உள்ள பெரிய வாய்க் கால் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி விளை நிலங்கள் உவர்ப்பாக மாறி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

                     சிதம்பரம் அருகே கிள்ளை, தைக்கால், சிங்காரக்குப்பம், சி.மானம்பாடி, பகுதியில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கான்சாகிப் வாய்க் கால் மூலம் வரும் காவிரி தண்ணீரைக் கொண்டு அப்பகுதியினர் விவசாயம் செய்து வந்தனர். விவசாயத் திற்கு தண்ணீர் தட் டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து மூன்று போக விவசாயம் தற்போது இரண்டு போகமாக குறைந்துள்ளது. அத்துடன், வாய்க்கால்கள் தூர் வாராமல் கிடப்பில் போட்டதாலும், மழை காலங் களில் தேங்கிய தண்ணீர் வடியாததாலும் நடவு பயிர்கள் அழுகியது. கடல் நீர், பாசன வாய்க்காலில் கலந்ததால் விவசாய நிலம் உவர்ப்பு தன்மையாக மாறியது. ஆழமாக இருந்த வாய்க்கால்கள் தூர்ந்ததால் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் ஒரே போகமாக சித்திரைப் பட்டத்தை (நவரை சாகுபடியை) நம்பி உள்ளனர்.

                    நஞ்சைமகத்துவாழ்க்கை பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வடிகாலாகவும், சி.மானம்பாடி உள் ளிட்ட 2  ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வாய்க்காலாகவும் உள்ள பெரிய வாய்க் கால் 20 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் தூர்ந்து புதர்மண்டி பாசனத்துக்கு தகுதியற்று, வாய்க்காலும், வரப் பும் சம தளமாக காட்சியளிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடிய வாய்க்காலில் தைக்காலில் இருந்து மானம் பாடி வரை  கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாராததால் முழுக் குத் துறை தீர்த்தவாரி ஆற்றில் தண்ணீர் ஓதம் ஏற்பட்டு  கட்டக்குச்சி ஆற் றின் வழியாக விவசாய நிலங்களில் உப்புத் தண்ணீர் பாய்ந்து நெற்பயிர்கள் கருகி வருகிறது.

                     பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிள்ளை தைக்காலில் இருந்து சிங்காரக்குப்பம், சி.மானம்பாடி வழியாக பொன்னந் திட்டு வடிகால் வரை உள்ள பெரியவடிகால் வாய்க்காலை தூர்வாரி, ஆழப்படுத்துவதுடன், கிளை வாய்க் கால்களான பனங்காட்டு, பக்கிரி, ராமு, முருகன் கோயில், நெடுஞ்சி, தொட்டி மதகு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களையும் ஆழப்படுத்த வேண்டும். இல்லையெனில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். பக்கிங்காம் கால்வாய் மாஸ்டர் பிளானில் இருப்பதாக காரணம் காட்டி புறக்கணிக்காமல் இப்பகுதியில் தூர்ந்துள்ள வாய்க்கால்களை பார்வையிட தனிக்குழு அமைத்து ஆய்வு செய்து, வாய்க்கால்களை தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior