சிறுபாக்கம்:
நல்லூர் ஒன்றிய தோட்டக்கலை மற் றும் வேளாண்மை வளர்ச்சித்துறை சார் பில் விவசாயிகள் சுற்றுலா சென்றனர்.
இதில் தோட்டக்கலை சார்பில் மரவள்ளி சாகுபடி செய்யும் 40 விவசாயிகள் தொழில் நுட்ப பயிற்சி பெற நாமக்கல், கோயம்புத்தூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், மற்றொரு குழு வேளாண்மை வளர்ச்சி குறித்து தொழில் நுட்ப பயிற்சி பெற நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இரு வாகனங்களில் சென்றனர். இவர்களை வேளாண்மைக்குழு தலைவர் பாவாடைகோவிந்தசாமி வழியனுப்பி வைத்தார். உடன் சேர்மன் ஜெயசித்ரா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமணன், உதவி வேளாண் அலுவலர்கள் கங்கைமணி, முத்துராமன், பெரியசாமி, கவுன்சிலர்கள் சக்தி விநாயகம், வெங்கடாசலம், மோகன் ராஜ் உட்பட பலர் இருந்தனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக