உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

மரணம் உண்டு...! மயானம் இல்லை...! விளை நிலங்களில் பிணம் புதைக்கும் அவலம்

விருத்தாசலம்:
 
                   கானாதுகண்டான் கிராமத்திற்கு பொது மயானம் இல்லாததால் அக்கிராமத்தில் இறப்பவர்களை அவரவர் விளை நிலங்களிலே புதைத்து வருகின்றனர். நிலம் இல்லாதவர்கள் புறம்போக்கு இடங்களில் புதைக்கின்றனர்.

                    விருத்தாசலத்தில் இருந்து காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில் ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது கானாதுகண்டான் கிராமம்.  கச்சிராயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 100 குடும்பங்களுக்கும் மேல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத் திற்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தும் இறந்தவர்களை புதைப்பதற்கான பொது மயானம் இல்லை. இதனால் இக்கிராமத் தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களிலே புதைத்தும், எரித்தும் வருகின்றனர். நிலம் இல்லாதவர்கள் ஓடை மற்றும் புறம்போக்கு இடங்களில் புதைக்கின்றனர்.

                    சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஊரின் கிழக்கு பகுதியில் அரை கி.மீ., தொலைவில்  காட்டுப்பகுதியில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த பொது மயானத்தில் பிணங்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். அவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது மயானம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா பெற்று தற் போது விளை நிலமாக உள்ளது. பொது மயானம் இல்லாதது குறித்து கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதுகுறித்து கானாதுகண்டான் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராஜபார்வதி கூறுகையில்

                     '40 வருடங்களுக்கு முன் கானாதுகண்டான் கிராமத் தின் கிழக்கு பகுதியில் பொதுமயானம் இருந்தது. தற்போது நிலமாக மாறிவிட்டது. எங்கள் ஊரில் உள்ள அனைவரது நிலத்திலும் இறந்தவர்களை புதைப் பதற்கு என குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி வைத்து விடுவோம். அங்கு எந்த பயிர்களையும் பயிரிடமாட்டோம்' என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior