பண்ருட்டி:
தமிழக கிராமங்களின் முழு சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் திட்டப்பணி நிறைவேற்றத்தை தெரிந்து கொள்வதற்காக இமாசலப் பிரதேசம் சிர்மார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினர் அண்ணா கிராமம் ஒன்றியம் கணிசப்பாக்கம் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தனர். தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பொருளியல் ஆய்வாளர் பி.எஸ்.செüஹான் தலைமையில் வந்த இக்குழுவினரை கணிசப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா சாமுவேலும், மகளிர் கூட்டமைப்பு தலைவி சரசு மற்றும் கிராம மக்களும் வரவேற்று சிறப்பித்தனர். தொடர்ந்து இக்குழுவினர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முலம் நடைபெறும் சோப்பு, சலவை பவுடர், பாத்திரம் கழுவும் பவுடர், ஊது வத்தி, பிளாஸ்டிக் மறு சுழற்சி, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து விசாரித்து தெரிந்துகொண்ட அவர்கள், கிராம மக்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக