உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

துணை மின்நிலையம் அமைப்பதில் சிக்கல்: 30 கிராம மக்களின் கனவு நிறைவேறுமா?


பண்ருட்டி: 

                   பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சியில்  இடம்  கிடைக்காததால்  துணை மின்நிலையம் அமைக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக இழுபறி நிலை நீடிக்கிறது.

                  பண்ருட்டி அடுத்த செம்மேடு, தாழம்பட்டு, அங்குசெட்டிப்பாளையம், சிறுவத்தூர், திருவாமூர், குடியிருப்பு, ஆத்திரிக்குப் பம், கருக்கை, ஏரிப்பாளையம், சேமக்கோட்டை, கொளப்பாக்கம், எலந்தம் பட்டு, சிறுவத்தூர், மணப் பாக்கம்   உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு  பூங்குணம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. பூங்குணம் துணை மின்நிலையத்தில் இருந்து திருவாமூர், காமாட்சிபேட்டை, மேலிருப்பு, விசூர் போன்ற கிராமங்கள் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மின் பாதையில் உள்ள 30 கிராமங்களில் பல பகுதியில் முந்திரி, சவுக்கை உள் ளிட்ட பயிர்கள் தான் பயிரிடப்படுகின்றன. காற்றின் போது சவுக்கை மரங்கள் மின் கம்பிகளில் விழுவதால் 30 கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்களால் ஏற்படும் மின்தடையே சீர் செய்த பிறகே இந்த 30 கிராமங்களில் மின்சாரம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக் காமல் அல்லாடும் நிலை ஏற்படுகிறது. மேலும் முந்திரி தொழிற் சாலை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் சீரான நிலையில்  மின்சாரம் வழங்க முடியாத நிலை உள்ளது.

                        இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செம்மேடு, கீழக்குப்பம் ஊராட்சியில்  துணை மின்நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்தது.  அதன்படி  கீழக்குப்பம் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.  ஆனால் செம்மேடு ஊராட்சியில் மட்டும் துணை மின்நிலையம்  அமைக்க 2 ஏக்கர் நிலம் கிடைக்காமல் பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. செம்மேடு ஊராட்சியில் கல்லாந்தோப்பு என்கிற பகுதியில் 5 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்த இடம் சரியில்லையெனில்  அருகில் உள்ள  மேலிருப்பு, சேமக்கோட்டை, திருவாமூர், சிறுவத்தூர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள  இடத்தையாவது  தேர்வு செய்ய வேண்டும். இதற்கு  வருவாய்த் துறை, மின்வாரியம், அப்பகுதி ஊராட்சி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior