உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

திறக்கப்படாத திருவந்திபுரம் நூலகம்


கடலூர்: 

                   திருவந்திபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரம் ஊராட்சியில் கே.என்.பேட்டை, டி.புதூர், ஓட்டேரி, திருவந்திபுரம் ஆகிய ஊர்களில் 5,000க் கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 2007-08ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட கலெக்டர் விருப்ப நிதி மூலம் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கிராம நூலக கட்டடம் கட்டப்பட்டது.

                   கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்பாடமால் பூட்டியே கிடக்கிறது. கிராமபுறங்களில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காகவும், பொது மக்கள் வசதிக்காகவும் இது போன்ற நூலகங்கள் அரசு நிதி மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. ஆனால் திருவந்திபுரம் நூலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது புரியாத புதிராக உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior