சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. விவசாயம், பி.எஸ்சி. தோட்டக்கலை, பி.பார்ம்., பி.பார்ம். லேட்டரல் என்டரி, டி.பார்ம். ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.
துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். விண்ணப்பங்கள் 30.06.2010 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.06.2010 அன்று மாலைக்குள் பல்கலைக்கழகத்துக்கு வந்துசேர வேண்டும் என துணைவேந்தர் தெரிவித்தார். விண்ணப்ப விற்பனை தொடக்க விழாவில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புலமுதல்வர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக