உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

பொருள்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்தாகாது

 கடலூர்:
 
              பல மாதங்கள் பொருள்கள் வாங்காமல் இருந்தாலும் ரேஷன் கார்டு ரத்து ஆகாது என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                  ரேஷன் பொருள்கள் தொடர்ந்து 3 மாதங்கள் வாங்காமல் இருந்தால், ரேஷன் கார்டு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ஏற்கெனவே இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. ரேஷன் அட்டையை பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ வாங்காமல் இருப்பதோ ரேஷன் அட்டைதாரரின் முழுஉரிமை. எனவே பொருள்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை நிறுத்தி வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பல மாதங்கள் பொருள்கள் வாங்காமல் இருந்து, தேவைப்படும்போது மீóண்டும் ரேஷன் கார்டு மூலம் பொருள்கள் வாங்கச் சென்றால், அவர்களுக்கு வழங்க மறுக்கக் கூடாது. தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன்கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. எல்லா மாதங்களிலும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் கிடையாது. தேவையான நேரங்களில் தேவையான அத்தியாவசிய, சிறப்புப் பொருள்களை ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இதுதொடர்பாக குறைகள் இருப்பின் ரேஷன் அட்டைதாரர்கள் 04142- 230223 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445000209 என்ற கைபேசி எண்ணிலோ மாவட்ட வங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior