நெல்லிக்குப்பம்:
உயிரிகள் காரணிகள் தயாரிப்பு மையத்தை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அண்ணாகிராமம் வட்டாரம் கீழ் அருங்குணத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயிரியல் காரணிகள் தயாரிப்பு மையம் செயல்படுகிறது. விவசாய பயிர்களை தாக்கும் பூச்சிகளை இயற்கை பூச்சிகளை கொண்டு விரட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கபடாது. இம் மையத்தை வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். மையத்துக்கு அரசு மானியமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனையடுத்து சர்க்கரை ஆலை கழிவில் இருந்து உரம் தயாரிப்பதையும் பார்வையிட்டார். உடன் துணை இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் சம்பத்குமார், அலுவலர் சந்திரராசு ராமதாஸ், தலைவி ஜெயா, பொரு ளாளர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக