உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும்: ஊராட்சி கூட்டமைப்பு தீர்மானம்


சிறுபாக்கம்: 

                  மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டு குடிநீரை தினசரி வழங்க தீர்மானிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. தலைவர் திரிசங்கு தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன், ஆதிதிராவிட நல கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கோபால் வரவேற்றார். கூட்டத்தில் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தொழுதூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

                   தற்போது கோடை காலம் நிலவுவதால் ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தினசரி கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும். ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கைப்பம்புகள் அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் வளர்மதி, கண்ணகி, மாரியம்மாள், மாரிமுத்து, செந்தாமரைகண்ணன், கந்தசாமி, முத் துசாமி, கொளஞ்சி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior