கிள்ளை:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்\னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இம்மையத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
பள்ளி திறந்ததும் பயணிகள் வரத்து குறைந்து காணப்படும். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டிற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் கடந்த ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் 6 ஆயிரத்து 300 பேரும், வெளி நாட்டினர் 253 பேரும் வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகள் வரத்து மூலம் ஐந்து நாளில் படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக