உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

சாலை​களை வீட்டு மனை​க​ளாக விற்க உயர்​ நீ​தி​மன்​றம் தடை

கட​லூர்,​ நவ. 29:​


கட​லூ​ரில் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட மனைப் பிரி​வில் உள்ள சாலை​களை,​ வீட்டு மனை​க​ளா​கப் பிரித்து விற்​பனை செய்ய சென்னை உயர்​நீ​தி​மன்​றம் இடைக்​கா​லத் தடை விதித்து உள்​ளது. ​க​ட​லூர் அருகே நத்​தப்​பட்டு ஊராட்​சிக்கு உள்​பட்ட பெண்ணை கார்​டன் என்ற மனைப் பிரிவு 15 ஆண்​டு​க​ளுக்கு முன் உரு​வாக்​கப்​பட்​டது. இதில் 200க்கும் மேற்​பட்ட வீட்​டு​ம​னை​கள் விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ளன.இந்த நிலை​யில் 2003, 2004, 2008-ம் ஆண்​டு​க​ளில் இந்த மனைப் பிரி​வில் பொதுப் பயன்​பாட்​டுக்​கான சாலை​க​ளாக அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட இடங்​கள்,​ 4 நபர்​க​ளுக்கு வீட்​டு​ம​னை​க​ளாக விற்​பனை செய்​யப்​பட்டு உள்​ள​தாம். இதற்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பெண்ணை கார்​டன் நலச் சங்​கத் தலை​வர் ஜி.சம்​பந்​தம் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம்,​ காவல்​துறை ஆகி​ய​வற்​றில் பல​முறை மனு கொடுத்​தும் நட​வ​டிக்கை எடுக்​க​வில்​லை​யாம். ​எ​னவே சம்​பந்​தம் இது​கு​றித்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். சாலை ​களை வீட்டு மனை​க​ளாக விற்​ப​தற்​கும்,​ அவற்​றில் கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொள்​வ​தற்​கும் தடை​வி​திக்க மனு​வில் கோரி இருந்​தார். வழக்கை நீதி​பதி பி.ஜோதி​மணி அண்​மை​யில் விசா​ரித்து இடைக்​கா​லத் தடை விதித்​தார். மேலும் இது தொடர்​பாக மாவட்ட ஆட்​சி​யர்,​ நகர மற்​றும் ஊரக திட்ட உதவி இயக்​கு​நர்,​ கோட்​டாட்​சி​யர்,​ வட்​டாட்​சி​யர்,​ வட்​டார வளர்ச்சி அலு​வ​லர்,​ நத்​தப்​பட்டு ஊராட்சி மன்​றத் தலை​வர்,​ ஜோதி நகர் மின்​வா​ரிய உத​விப் பொறி​யா​ளர் ஆகி​யோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்​ப​வும் நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​

Read more »

தமிழ், கல்வி, வேளாண்​மைக்கு முன்​னு​ரிமை

சிதம்ப​ரம்,​ நவ,​ 29:​


தமிழ்​மொழி,​ கல்வி,​ வேளாண்மை ஆகிய மூன்று துறை​க​ளுக்கு தின​மணி நாளி​த​ழில் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என ஆசி​ரி​யர் கே.வைத்​திய​நா​தன் தெரிவித்தார். பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்​ப​ரம், ஹோட்டல் சார​தா​ராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாச​கர் சந்​திப்பு நிகழ்ச்சியில் அவர் ​ பேசி​யது:​

வா​ச​கர்​கள் ஆசி​ரி​யரை சந்​திப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஆசி​ரி​யர் வாச​கர்​களை சந்​திப்​ப​தில் பெரு​மை​யா​கக் கரு​து​கி​றேன். எழுத்து என்​பது சமு​தா​யத்​தில் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தக்​கூ​டி​ய​தா​க​வும்,​நாளைய சமு​தா​யத்​திற்கு பய​னு​டை​ய​தா​க​வும் இருக்​க​வேண்​டும். அப்​படி இல்​லை​யெ​னில் அர்த்​தம் இருக்​காது. பொழு​தைத்​தான் வீண​டிக்​கும். எ​னவே,​ எழு​து​கின்ற எழுத்​தின் உயிர்ப்​பும்,​ சிந்​த​னையை தட்டி எழுப்​பு​கின்ற கருத்​துக​ளும் இருக்​க​வேண்​டும். அர​சுக்​கும் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும் எதி​ரான கருத்​துகளை பதி​வு​செய்​வது எங்​க​ளது நோக்​க​மல்ல. பத்​தி​ரிகை என்​பது தவ​று​களைச் சுட்​டிக்​காட்​டு​கின்ற கண்​ணாடி. அப்​போ​து​தான் சமு​தா​யத்​திற்கு பயன் ஏற்​ப​டும். தவறை திருத்​தக் கூடிய பொறுப்​பில் உள்ள ​ ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வா​கத்​திற்​கும் பல லட்​சம் சம்​ப​ளம் வழங்​கப்​ப​டு​கி​றது. அந்த நிர்​வா​கத்​தி​னர் தவறை திருத்​த​வேண்​டும். அதன் மூலம் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வாக இயந்தி​ரத்​திற்​கும் நற்​பெ​யர் கிடைக்​கும் என கரு​து​வ​தால்,​ சமு​தா​யத்​திற்கு பயன்​ப​டும் கரு​வி​யாக தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய ஆட்​சி​யா​ளர்​கள் மாறி​னா​லும்,​ தின​மணி கண்​ணா​டி​யா​கத் தான் இருக்​கும். ச​மு​தா​ யத்​தில் நடை​பெ​றும் தவ​று​கள் களை​யப்​ப​ட​வேண்​டும் என்ற நல்ல எண்​ணத்​து​டன் தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய சமு​தா​யத் தலை​மு​றை​யி​னர் நன்​மைக் கருதி அவர்​க​ளுக்கு சிந்​த​னைத் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தும் பணியை தின​மணி செய்​கி​றது.÷வி​வ​சா​யம் குறைந்​து​வ​ரு​வது அச்​சத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.தன்​னி​றைவு தான் ஒரு நாட்​டின் பாது​காப்பு என்​பது முன்​னோர்​கள் கண்​ட​றிந்த விஷ​யம்.விவ​சா​யம் திட்​ட​மிட்டு அழிக்​கப்​பட்​டு​வ​ரு​வ​தாக கரு​து​கி​றேன். இதற்கு முன்​னேற்​பாடு தான் தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டம். இதைப்​பற்றி சிந்​திக்​க​வேண்​டிய கடமை உள்​ளது.÷உயர் ​கல்வி பயில மாண​வர்​களை தயார்​ப​டுத்த ​வேண்​டும் என்​ப​தற்​காகத்தான் தின​ம​ணி​யில் கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​ப​டு​கி​றது.​ ​ முது​பெ​ரும் தலை​வர் ஜே.சி. கும​ரப்​பாவை மத்​திய,​ மாநில அர​சு​கள் மற்​றும் காங்​கி​ரஸ் கட்சி உள்​ளிட்ட அனை​வ​ரும் மறந்​து​விட்ட நிலை​யில் அவ​ரது பொன்​விழா நினைவு நாளை தின​மணி சார்​பில் கொண்​டா​ட​வுள்​ளோம் என்​றார் ஆசி​ரி​யர் வைத்​திய​நா​தன். முன்​னாள் அமைச்​சர் வி.வி.சாமி​நா​தன்,​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஓய்​வு​பெற்ற தமிழ்த்​துறைப் பேரா​சி​ரி​யர்​கள் ஆனந்​த​ந​ட​ராஜ தீட்​சி​தர்,​ முன்​னாள் அர​சி​யல் அறி​வி​யல் துறைத் தலை​வர் ஏ.சண்​மு​கம்,​ தமிழ்​தே​சிய பொது​வு​டை​மைக் கட்சி ஒருங்​கி​ணைப்​பா​ளர் கி.வெங்​கட்​ரா​மன்,​அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழக மேலாண் துறைத் தலை​வர் எம்.பஞ்​ச​நா​தன்,​ வர்த்​தக சங்​கத் தலை​வர் எம்.ஆதி​மூ​லம்,​ஆசி​ரி​யர் வாசு,​ ஓய்​வு​பெற்ற வங்கி அதி​காரி மனோ​க​ரன்,​ரோட்​டரி சங்க சமு​தாய இயக்​கு​நர் மணி​வண்​ணன்,​விவ​சாய சங்​கத் தலை​வர் ரவீந்​தி​ரன்,​ வாச​கர்​கள் பாலாஜி கணேஷ்,​ காளி​தாஸ்,​ சித்​தரஞ்​சன்,​ராதா​கி​ரு​ஷ்ணன்,​வழக்​க​றி​ஞர் கே.பால​சுப்​ர​ம​ணி​யன்,​தேவ​ரா​ஜன் உள்​ளிட்​டோர் ​ பங்​கேற்​ற​னர்.

Read more »

மேடைக் கலைப் போட்டி:​ கட​லூர் மாணவி தேர்வு

கட லூர்,​ நவ. 29:​

ஜவ​கர் சிறு​வர் மன்​றம் சார்​பில் நடத்​தப்​பட்ட தென் மண்​டல போட்​டி​க​ளில்,​ மேடைக் கலைப் போட்​டி​யில் கட​லூர் மாணவி சஜீ​வன் ஆர்யா தேர்ந்து எடுக்​கப்​பட்​டார். ​ இ​து​கு​றித்து கட​லூர் மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யர் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

க ​ட​லூ​ரில் உள்ள மாவட்ட இசைப் பள்​ளி​யில் ஜவ​கர் சிறு​வர் மன்​றம் இயங்கி வரு​கி​றது. இதில் 150 குழந்​தை​கள் பல்​வேறு கலைப் பயிற்​சி​க​ளில் ஈடு​பட்டு உள்​ள​னர். மன்​றம் வாயி​லாக 9 முதல் 16 வயது வரை​யி​லான மாண​வர்​க​ளுக்கு மாவட்ட அள​வில் போட்​டி​கள் நடத்தி தேர்வு பெற்​ற​வர்​கள் தென்​மண்​டல அள​வி​லான போட்​டிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​ட​னர். க​ட​லூர் மாவட்​டத்​தில் இருந்து சென்ற 4 பேரில் மாணவி சஜீ​வன் ஆர்யா ​(செயின்ட் மேரீஸ் மேல்​நி​லைப் பள்ளி,​ கட​லூர்)​ மேடைக் கலை போட்​டி​யில் தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளார். அவர் புது​தில்​லி​யில் நவம்​பர் 30 முதல் டிசம்​பர் 5-ம் தேதி வரை நடை​பெ​றும் தேசிய அள​வி​லான போட்​டி​யில் பங்​கேற்​பார்,​ இதில் வெற்றி பெறு​வோ​ருக்கு குடி​ய​ர​சுத் தலை​வ​ரால் "இளம்​திரு விருது' வழங்​கப்​ப​டும். சஜீ​வன் ஆர்​யா​வுக்கு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பாராட்​டுத் தெரி​வித்​தார் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.

Read more »

200 பேருக்கு இல​வச அக்​கு​பஞ்​சர்,​ ஆயுர்​வேத சிகிச்சை

கட ​லூர், ​நவ. 29:​

கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த இல​வச அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத சிகிச்சை முகா​மில் 200 பேருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ​ க​ட​லூர் அரிமா சங்​கம்,​ கவுன்​சில் ஆப் இந்​தி​யன் அக்​கு​பஞ்​ச​ரிஸ்ட்,​ கட​லூர் சுசான்லி அக்​குப்​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வ​மனை மற்​றும் டாபர் ஆயுர்​வே​திக் இந்​தியா நிறு​வ​னம் இணைந்து இந்த மருத்​துவ முகா​முக்கு ஏற்​பாடு செய்து இருந்​தன. நக​ராட்சி மேல்​நி​லைப் பள்ளி வளா​கத்​தில் இந்த முகாம் நடந்​தது. ​÷வ​லி​கள் மற்​றும் பெண்​க​ளுக்​கான மாத​வி​டாய் சம்​பந்​தப்​பட்ட நோய்​க​ளுக்​காக பிரத்​தி​யோ​க​மாக இந்த முகாம் நடத்​தப்​ப​ட​டது. ​ இதில் சுசான்லி மருத்​து​வ​மனை டாக்​டர்​கள் ஏ.ரவி,​ உஷா​ரவி ஆகி​யோர் தலை​மை​யில் அக்​கு​பஞ்​சர் மற்​றும் ஆயுர்​வேத மருத்​து​வர்​கள் ​ டி.சுந்​தர்​ரா​ஜன்,​ என்.ராதா​கி​ருஷ்​ணன்,​ ஆர்.பானுப்​பி​ரியா,​ வி.பவ​தா​ரிணி,​ ஆர்.சக்​க​ர​வர்த்தி உள்​ளிட்ட மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​த​னர். இதில் 200 பேர் பயன் அடைந்​த​னர். ​மா​த​வி​டாய் சம்​பந்​தப்​பட்ட நோய்​க​ளுக்​காக பல பெண்​கள் சிகிச்சை பெற்​ற​தாக டாக்​டர் ஏ.ரவி தெரி​வித்​தார். ம​ருத்​துவ முகாம் தொடக்க விழா​வுக்கு,​ அரிமா சங்​கத் தலை​வர் ஏ.ஆர்.வேல​வன் தலைமை வகித்​தார். அக்​கு​பஞ்​சர் மருத்​து​வம் குறித்து டாக்​டர் உஷா​ரவி உரை நிகழ்த்​தி​னார். டாபர் நிறு​வன விற்​பனை அபி​வி​ருத்தி அலு​வ​லர் பாலாஜி,​ அரிமா சங்க நிர்​வா​கி​கள் ஆர்.பூபா​லன்,​ எஸ்.இஸ்​ரேல்,​ கே.திரு​மலை உள்​ளிட்​டோர் பேசி​னர்.

Read more »

அரசு மதுக்​கடை பணி​யா​ளர்​கள் ஊர்​வ​லம்,​ ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ நவ. 29:​

தமிழ்​நாடு அரசு டாஸ்​மாக் பணி​யா​ளர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​ அ​ரசு மதுக்​க​டைப் பணி​யா​ளர்​களை நிரந்​த​ரம் செய்ய வேண்​டும். கல்​வித் தகு​திக்கு ஏற்ப மாற்​றுப் பணி வழங்க வேண்​டும். கால​முறை ஊதி​யம் வழங்க வேண்​டும். மது விற்​ப​னை​யில் 1 சதம் ஊக்​கத் தொகை வழங்க வேண்​டும். நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி அனைத்​துப் பணி​யா​ளர்​க​ளுக்​கும் நிலு​வைத் தொகை வழங்க வேண்​டும். வார விடு​முறை மற்​றும் அரசு விடு​முறை வழங்க வேண்​டும். 8 மணி நேர வேலைத்​திட்​டத்தை அமுல்​ப​டுத்த வேண்​டும் என்​பவை உள்​ளிட்ட கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது. ஊர்​வ​லம் திருப்​பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அரு​கில் இருந்து புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​தது. ஊர்​வ​லத்தை அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநில பொதுச் செய​லா​ளர் கோ.சீனு​வா​சன் தொடங்கி வைத்​தார். ​ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆர்.கார்த்​தி​கே​யன் தலைமை வகித்​தார். மாநில துணைத் தலை​வர் கே.சர​வ​ணன் முன்​னிலை வகித்​தார். மாவட்​டத் தலை​வர் கோவிந்​த​ரா​ஜன் வர​வேற்​றார். அரசு தொழில் நுட்​பப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் சுந்​த​ர​ராஜா,​ அர​சுப் பணி​யா​ளர் சங்க மாவட்​டப் பொரு​ளா​ளர் ராஜா​மணி ஆகி​யோர் வாழ்த்​திப் பேசி​னர். அர​சுப் பணி​யா​ளர் சங்க மாவட்​டத் தலை​வர் பி.நல்​ல​தம்பி நிறைவு உரை நிகழ்த்​தி​னார்.

Read more »

கடலூர் சீர்​தி​ருத்​த பள்​ளி​யிலிருந்து 4 சிறு​வர்​கள் தப்​பி​ ஓட்டம்

கட ​லூர்,​ நவ. 29:​

கட​லூர் அரசு சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்​ளி​யில் இருந்து இளம் குற்​ற​வா​ளி​க​ளான 4 சிறு​வர்​கள்,​ ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​ க​ட​லூர் கடற்​க​ரைச் சாலை​யில் அரசு கூர்​நோக்கு இல்​லம் என்ற சிறு​வர் சீர்​தி​ருத்​தப் பள்ளி செயல்​பட்டு வரு​கி​றது. இதில் இளம் குற்​ற​வா​ளி​கள் அடைக்​கப்​பட்டு உள்​ள​னர். இவர்​க​ளில் 4 பேர் ஞாயிற்​றுக்​கி​ழமை தப்பி ஓடி​விட்​ட​னர். ​விக் ​கி​ர​வாண்​டி​யைச் சேர்ந்த ராஜா ​(16), வட​லூர் கருங்​கு​ழி​யைச் சேர்ந்த ரமேஷ் ​(15), கட​லூர் முது​ந​க​ரைச் சேர்ந்த விக்​னேஷ் ​(15), நாரா​ய​ணன் ​(15) ஆகிய அந்த 4 பேரும் பல்​வேறு குற்​றச் செயல்​க​ளில் ஈடு​பட்​ட​தற்​காக கூர்​நோக்கு இல்​லத்​தில் சேர்க்​கப்​பட்டு இருந்​த​னர். ​ ஞா​யிற்​றுக்​கி​ழமை காலை அவர்​கள் 4 பேரும் கூர்​நோக்கு இல்​லத்​தின் பின்​பக்​கச் சுவர் வழி​யாக ஏறிக்​கு​தித்து தப்பி விட்​ட​னர். இது​கு​றித்து கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிறு​வர்​க​ளைத் தேடி வரு​கி​றார்​கள்.

Read more »

தேமு​திக சார்​பில் பக்​ரீத் பண்​டிகை

​சிதம்​ப​ரம்,​ நவ. 29:​

சிதம்​ப​ரம் நகர தேசிய முற்​போக்கு திரா​விட கழ​கம் சார்​பில் பக்​ரீத் பண்​டி​கையை முன்​னிட்டு உணவு மற்​றும் இனிப்பு வழங்​கும் நிகழ்ச்சி சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. ந​க​ரச் செய​லா​ளர் சி.க.விஜ​ய​கு​மார் தலைமை வகித்​தார். நகர அவைத் தலை​வர் டி.கே.பி.ராமர் முன்​னிலை வகித்​தார். மாவட்​டச் செய​லா​ளர் ஆர்.உமா​நாத்,​ மாநில பட்​ட​தாரி அணி துணைச் செய​லா​ளர் பேரா​சி​ரி​யர் பூ.ராஜ​மன்​னன்,​ மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்.பாலு,​ மாவட்ட அவைத் தலை​வர் ஆர்.ஞானப்​பி​ர​கா​சம் ஆகி​யோர் பங்​கேற்று ஏழை இஸ்​லா​மிய மக்​க​ளுக்கு உணவு மற்​றும் இனிப்பு வழங்​கி​னார்​கள். நகர பொரு​ளா​ளர் ப.கணே​சன் நன்றி கூறி​னார்.​

Read more »

பண்ருட்டியில் விதை மணிலா உற்பத்தி மும்முரம்

பண்ருட்டி, நவ.29:

மணிலா விதைப்பு பருவம் தொடங்கியுள்ளதால், பண்ருட்டி பகுதியில் உள்ள மணிலா உடைப்பு ஆலைகளில் விதை மணிலா உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாய விளைப் பொருள்களில் நெல், கரும்புக்கு அடுத்தப்படியாக எண்ணெய் வித்துக்களில் மணிலா அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது.

கார்த்திகை, மார்கழி மாதத்தில் மணிலா விதைப்பு செய்யப்படும். இருப்பினும் மழையால் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தால் அனேக விவசாயிகள் கார்த்திகை தீபம் முடிவடைந்ததும் மணிலா விதைப்பை தீவிரப்படுத்துவர். பண்ருட்டி வட்டத்தில் பண்ருட்டி, மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மணிலா உடைப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவர்கள் திருவண்ணாமலை, ஆந்திரம், குஜராத், கர்நாடகம் போன்ற பகுதிகளில் இருந்து மணிலாவை இறக்குமதி செய்கின்றனர். பெரும்பாலும் ஆந்திரம், குஜராத் ஆகிய பகுதிகளில் மணிலா குறைந்த விலையில் கிடைப்பதால் அங்கிருந்து இறக்குமதி செய்கின்றனர். இறக்குமதி செய்யும் மணிலாவை இயந்திரத்தின் மூலம் உடைந்து பயிர்களை தனியாக பிரித்து எடுக்கின்றனர்.

இது குறித்து மணிலா வியாபாரி ஒருவர் கூறியது: மணிலாவை இயந்திரத்தின் மூலம் உடைத்து பயிர்களை தனியாக எடுப்போம். இதில் விதை, உணவு, எண்ணெய்க்காக என தரம் பிரித்து எடுத்து விடுவோம். விதை மணிலாவை விவசாயிகள் நேரிடையாக ஆலைக்கே வந்து வாங்கி செல்வர், மேலும் வெளியூரில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்போம். இரண்டாம் நிலையில் உள்ள மணிலாவை கேக் கம்பெனி, பட்டாணிக் கடைகளுக்கு விற்பனை செய்வோம். மூன்றாம் நிலையில் உள்ள மணிலா எண்ணெய் எடுக்கப் பயன்படுத்தப்படும். தற்போது விதை மணிலா விற்பனை மந்தமாக உள்ளது. கார்த்திகை தீபம் முடிந்தவுடன் தான் சந்தை நிலவரத்தை கூறமுடியும். தினந்தோறும் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் வேலை ஆட்களும் வேலை செய்யாத நிலையில் முழு கூலியும் கொடுக்க வேண்டியுள்ளது என வேதனையுடன் கூறினார்.

Read more »

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

கடலூர், நவ. 29:

பள்ளிகளில் சேராமல் தனியாக படிக்கும் மாணவர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (1-12-2009) தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டல துணை இயக்குநர் தே.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு 1-12-2009 தொடங்கி 5-12-2009 வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழபெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர் மாவட்டத்தில் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுககான நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களின் முகவரிக்கு அனுப்பட்டு உள்ளன. நுழைவுச் சீட்டுகள் கிடைக்காதவர்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அரசு தொழில் நுட்பத் தேர்வுகள் 2009 - விவசாயம், கைத்தறி நெசவு, மற்றும் அச்சுக்கலைப் பிரிவு முதலிய தேர்வுகள் 4-12-2009 முதல் 12-12-2009 வரை நடைபெற உள்ளன. இத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்து உள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்வு மைத்துக்குச் சென்று 30-11-2009 முதல் நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை

கடலூர், நவ. 28:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் சிறப்பாகப் பயிலும் மாணவ மாணவியருக்கு வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வித் தரத்தில் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் தமிழகத்தில் பிளஸ்-2 பிரிவில் 26-வது இடத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. பிரிவில் 27-வது இடத்திலும் இருந்தது. கடலூர் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும் மோசமான மதிப்பெண்கள் எடுத்ததற்கும் காரணங்கள் ஆராயப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிவுற்றதும், பள்ளி வாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்பட்டது. அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண்கள் பெறவும் ஆலோசனைகள் பெறப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வுகள் முடிவுற்றதும் இதேபோல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் அதிக மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றாவது வெற்றிபெறும் வகையில் அனைத்துப் பாடங்களுக்கும் கையேடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்தக் கையேட்டில் உள்ள பாடங்களை ஒழுங்காகப் படித்தாலே போதும், 40 மதிப்பெண் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. ÷அடுத்த கட்டமாக சிறப்பாகப் ப.யிலும் மாணவர்களை, மேலும் அதிக மதிப்பெண்களை பெறச் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 3 மாணவர்கள் மட்டும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 68 பேர். வேதியியல் பாடத்தில் 200 மதிபெண் பெற்றவர்கள் 11 பேர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 33 பேர். உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் 3. ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 29 பேர். கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் 109 பேர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 340 பேர். 199 மதிப்பெண் பெற்றவர்கள் ஏன் 200 மதிப்பெண் பெறமுடியாமல் போயிற்று? என்ற அடிப்படையில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்று இருக்கும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும் அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்கு கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராஜேந்திரன் பொறுப்பு ஏற்று நடத்தினார். சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு, மாணவ மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Read more »

ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

பண்ருட்டி, நவ.28:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் எம்எல்ஏ தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையின் போது நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசியது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்டப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணிகளை ஆய்வு செய்து வந்தனர். தற்போது உள்ளவர்கள் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று ஆய்வு ஏதும் செய்வதில்லை என தெரிய வருகிறது. அனேக ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்து வருடக் கணக்காகிறது.÷சத்துணவுக் கூடத்தையும் ஆய்வு செய்யவில்லை. பண்ருட்டி ஒன்றியத்தில் அதிகாரிகளை அடிக்கடி மாற்றம் செய்வதால் பிரசனையாக உள்ளது. தமிழகத்திலே சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்ட இடம் காடாம்புலியூர் சமத்துவபுரம் ஒன்று தான். வசதி படைத்தவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. சமத்துவபுரம் பயனாளிகள் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் பிரச்னையை எழுப்பவுள்ளேன். அதிகாரிகள் என்னுடன் தொகுதியை பற்றி ஆலோசனை செய்வதுவுமில்லை, ஒருங்கிணைந்து செயல்படுவதுவும் இல்லை. அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு விரைந்து சென்று சேர வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அளித்த சுற்று வட்டார மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியை ரூ.3 கோடியாக பெற்று தந்துள்ளேன்.÷கிராமத்தில் இருந்து அதிகாரிகளை நாடி வரும் மக்கள் பிரதிநிதிகளை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்கள் உங்களை மனம் புண்படும்படியோ, மன உலைச்சல் அடையும் படி நடந்துக் கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்க நானும் முன்னிருப்பேன் என தி.வேல்முருகன் பேசினார். கூட்டத்தில் ஒன்றியப் பெருந்தலைவர் எழிலரசிரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், ரீட்டா உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிப்பு

கடலூர், நவ.28:

கடலூரில் சனிக்கிழமை மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் தீப்பற்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடலூரில் இருந்து கண்டக்காடு செல்லும் வழியில் உப்பளவாடி அருகே உள்ள மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த எண்ணெய் கீழே கொட்டத் தொடங்கியது. கடலூர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெருமாள் நகர், என்.ஜி.ஓ.நகர், அழகப்பா நகர், ஓம்சக்தி நகர், நேருநகர், குண்டுஉப்பளவாடி சின்ராஜ் நகர் உள்ளிட்ட 10 நகர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டிரான்ஸ்ஃபார்மரைப் பழுது பார்ககும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.

Read more »

லிட்டில் ஸ்டார்ஸ் விழா

சிதம்பரம், நவ.28:


சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் லிட்டில் ஸ்டார்ஸ் மற்றும் பிரைம் ரோஸ் ஷோ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அண்ணாமலைப் பல்கலை. உடற்கல்வித்துறை இயக்குநர் எஸ்.மங்கையர்கரசி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் துணைச் செயலர் எஸ்.கஸ்தூரி, சீனியர் முதல்வர் எஸ்.மீனாட்சி, முதல்வர் ஜி.சக்தி, துணை முதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

மாநில அளவிலான போட்டிக்கு சிதம்பரம் மாணவர்கள் தேர்வு

சிதம்பரம், நவ.28:

சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தேர்வு பெற்றுள்ளனர். இப் பள்ளி மாணவர்கள் எஸ்.துளசிராமன், எஸ்.விஷ்ணு, எஸ்.சுந்தர், ஆர்.ஹரிகிருஷ்ணன், ஜெ.ஜஸ்டின்ராஜா, எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜெ.ஜெகதலாபிரதாப், சண்முகசுந்தரம் ஆகியோர் அண்மையில் கடலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சீனுவாசன், ஆர்.வெங்கடேஷ் ஆகியோரை பள்ளி நிர்வாகி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

கிராமிய ஆயுள் காப்பீடு பயனளிப்பு விழா

சிதம்பரம், நவ.28:

கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடுத் திட்டத்தின் நிதியளிப்பு விழா கீழமூங்கிலடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கே.மாயாவதி குப்புசாமி தலைமை வகித்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கே.குமரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலகத் தலைவர் ஆர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் மணி காப்பீட்டுத் திட்டம் வைத்திருந்த இறந்த கலாராணியின் கணவர் கணபதியிடம் ஆயுள் காப்பீட்டு நிதியை வழங்கினார். கே.ஜனகன் நன்றி கூறினார்.

Read more »

இன்று ஆயுர்வேத சிகிச்சை முகாம்

கடலூர், நவ. 28:

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கடலூர் அரிமா சங்கம், கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்ரிஸ்ட், கடலூர் சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் பகல் ஒரு மணி வரை முகாம் நடைபெறும். அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருத்துவ தம்பதிகள் டாக்டர்கள் ஏ.ரவி, உஷா ரவி மற்றும் 16 மருத்துவர்கள் முகாமில் சிகிச்சை அளிகக இருக்கிறார்கள். மூட்டுவலி, கழுத்துவலி, முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு வலிகள், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read more »

நவீன அறி​வி​யல் விவ​சா​யம்:​ எம்.பி. வலி​யு​றுத்​தல்

கடலூர்,​ நவ.28:​

இந்தியாவின் இப்போதைய தேவை நவீன அறிவியல் விவசாயம் என்று கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார். ​

மிழ்நாடு மற்றும் புதுவை நுகர்வோர் குழுக்ளின் கூட்மைப்பு ​(ஃபெட்காட்)​ சார்பில் 6-வது மாநில நுகர்வோர் மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடந்தது. ​ ÷ருநிலை மாற்மும் உணவுப் பாதுகாப்பும் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் கே.எஸ்.அழகிரி பேசியது:​ ​

÷னிதர்ளிடையே விழிப்புணர்வை ஏற்டுத்துவது மெத்த சிரமம். ​ எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து வருகிறது. வயல்கள் பிளாஸ்டிக் குப்பைளாக மாறிவிட்டன. விவசாயம் பாதிக்கப்டுகிறது. ​

÷பூமியில் எங்கு தோண்டினாலும் பிளாஸ்டிக் குப்பைதான் கிடைக்கும். மழைநீர் நிலத்டியில் செல்ல வாய்ப்பு இல்லை. இது குறித்து நுகர்வோர் அமைப்புகள்தான் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும். ​

÷ளிமண்ணில் இருந்து போலி உளுந்து தயாரிக்கும் ஆலைக் கூட உளளது. தவறு செய்யாமல் லாபம் சம்பாதிக்க முடியாது எனற எண்ணம் வியாபாரிகள் மனதில் பதிந்து விட்டது.

÷தற்கு எதிராக நுகர்வோர் அமைப்புகள் செயல்பட வேண்டும். எதிர்ப்பு வரத்தான் செய்யும். வம்புக்காரன் என்று பேச்சு வரும். சீனாவில் ஒரு ஏக்ரில் 150 முதல் 200 மூட்டை ​(60 கிலோ)​ வரை உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறார்கள். ​

÷மது நாட்டில் உணவு தானிங்கள் பலழிளில் விரயம் ஆகிறது. உணவு உற்பத்தியைப் பெருக்காமல் உணவுப் பாதுகாப்பை ஏழை மக்ளுக்குப் பெற்றுத் தர முடியாது. ​

மது நாட்டில் ​ 60 சதவீதம் மக்கள் விவசாயிகள் வடமாநிலங்ளில் பல கிராமங்ளில் வசிக்க வீடுகள் இல்லை. மின்சாரம் இல்லை. அவர்ளுக்காகக் கொண்டு வரப்பட்துதான் கிராமப்புற வேலை உறுதித் திட்டம்.

விசாயம் அறிவியல் மயமாக வேண்டும். நுகர்வோர் இயக்கங்கள் விழிப்புணர்வை ஏற்டுத்த வேண்டும் என்றார் அழகிரி.

மாநாட்டில் உணவுத் துறை செயலர் கே.சண்முகம் பேசுகையில்,​ போலி நுகர்வோர் அமைப்புளைக் கட்டுப்டுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவர்ளின் செயல்ளைக் கண்காணிக்க,​ இனம் கண்டுகொள்ள அரசு யோசித்து வருகிறது. ​உற்பத்தி பெருகாவிட்டால் உணவுப் பாதுகாப்பு இல்லை. துவரம்ருப்பு நமது தேவை 3.4 மில்லியன் டன். ஆனால் உற்புத்தி 2.3 மில்லியன் டன்தான். நாம் வெளிநாட்டில் ஒரு பொருளை கொள்முதல் செய்ய முற்பட்டால் விலை உயர்ந்து விடுகிறது. ​ருழையை உரிய நேரத்தில் பெய்தில்லை. எனவே நமது விவசாயத்தில் ஆராய்ச்சி மிகவும் தேவை. மாற்றம் தேவை. உற்பத்தி பெருவேண்டும். உணவு வீணாக்கப்டுகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். ​

மாநாட்டில் உணவுத் துறை இயக்குநர் .ராஜாராம்,​ கடலூர் மாவட்ட ஆட்சியர்பெ.சீதாராமன்,​ கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன்,​ ஃபெட்காட் நிறுனத் தலைவர் தேசிகன்,​ நிறுவன பொதுச் செயலாளர் ஹென்றி திபேன்,​ பெருந்லைவர் ஜி.ராஜாராம்,​ பொதுச் செயலர் புதுராஜா,​ முன்னாள் பொதுச் செயலர் நிஜாமுதின் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

சனி, நவம்பர் 28, 2009

ஆட்டோ ஓட்​டு​நர்​கள் ஸ்டி​ரைக்

கட ​லூர்,​ நவ.27: ​

கட​லூ​ரில் ஆட்டோ ஓட்​டு​நர்​கள் வெள்​ளிக்​கி​ழமை வேலை நிறுத்​தம் செய்​த​னர். கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஊர்​வ​லம் மற்​றும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். வேலை நிறுத்​தம் கார​ண​மாக பள்ளி மாண​வர்​கள் பெரி​தும் பாதிக்​கப் பட்​ட​னர். ​÷ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும்,​ திருப்​பாப்பு​லி​யூர் பஸ் நிலை​யத்​தில் ஆட்​டோக்​கள் நிறுத்த அனு​ம​திக்க வேண்​டும்.
உ​டல் ஊன​முற்​ற​வர்​கள்,​ நோயா​ளி​கள் போன்​ற​வர்​களை பஸ்​நி​லை​யத்​துக்​குள் ஆட்​டோக்​க​ளில் கொண்​டு​விட அனு​ம​திக்க வேண்​டும். வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​ல​கத்​தில் ஆட்​டோக்​க​ளுக்கு அதிக அள​வில் பெர்​மிட் கொடுப்​பதை நிறுத்த வேண்​டும் என்ற கோரிக்​கைளை வலி​யு​றுத்தி வெள்​ளிக்​கி​ழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ ரிக்​ஷாக்​கள் வேலை​நி​றுத்​தம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது. ​ இ​த​னால் கட​லூ​ரில் 2 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஆட்​டோக்​கள் இயங்க வில்லை. வேலை​நி​றுத்​தம் செய்த ஆட்டோ ஓட்​டு​நர்​கள்,​ உழ​வர் சந்தை அரு​கில் இருந்து ஊர்​வ​ல​மா​கப் புறப்​பட்டு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்தை அடைந்​த​னர். அங்கு ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர். ​ க​ட​லூ​ரில் ஆட்​டோக்​கள் ஓடா​த​தால் பள்​ளி​க​ளுக்​குச் செல்​லும் மாண​வர்​கள் பெரி​தும் அவ​திப்​பட்​ட​னர். வாகன வசதி உள்ள பெற்​றோர் பலர் தங்​கள் குழந்​தை​களை இரு சக்​கர வாக​னங்​க​ளில் அழைத்​துச் சென்​ற​னர். பஸ்​க​ளில் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்து. சில பஸ்​க​ளில் கூரை மீதும் பய​ணம் செய்​த​னர்.

Read more »

மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிப்பு

கட ​லூர்,​ நவ.27:

கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​டது.வி​டு​த ​லைச் சிறுத்​கைள் கட்சி அலு​வ​ல​கத்​தில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் இலங்​கை​யில் ஈழத்​த​மி​ழர் போராட்​டத்​தில் இறந்​த​வர்​க​ளின் படங்​களை வைத்து மெழு​கு​வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்​தி​னர். ​நி​கழ்ச்​ சிக்கு,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்ட துணைச் செய​லா​ளர் அறி​வு​டை​நம்பி தலைமை வகித்​தார். மாவட்​டத் துணைச் செலா​ளர் திரு​மேனி முன்​னிலை வகித்​தார்.ம​றைந்த வீரர்​க​ளுக்கு நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச் செல்​வன்,​ மெழு​கு​வர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்​தி​னார்.

Read more »

மருத்துவ சமூகத்தின் முப்​பெ​ரும் விழா

பண் ​ருட்டி,​ நவ.27: ​

தமிழ்​நாடு மருத்​து​வர் சமூக நல சங்​கத்​தின் கட​லூர் மாவட்​டம் வடக்கு மாநில பொதுக் குழு தீர்​மான விளக்​கக் கூட்​டம்,​ செயற்​குழு கூட்​டம்,​ முத​லாம் ஆண்டு கொடி​யேற்று விழா ஆகிய முப்​பெ​ரும் விழா காடாம்பு​லி​யூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது. மா​நில துணைத் தலை​வர் என்.ராஜ​மா​ணிக்​கம் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில்,​ மா​வட்​டச் செய​லர் கே.முரு​க​தாஸ்,​ பொரு​ளா​ளர் எஸ்.சுந்​த​ர​பாலு ​ வர​வேற்​ற​னர். மாநி​லத் தலை​வர் எம்.நடே​ச​னார், பொது செய​லர் எம்.ஜி.பாக்​ய​நா​த​னார்,​ ஆகி​யோர் ​பேசி​னர்.

Read more »

சாலை விபத்​தில் வியா​பாரி சாவு

கட​லூர்,​ நவ.27: ​

கட​லூர் அருகே வெள்​ளிக்​கி​ழமை நிகழ்ந்த சாலை விபத்​தில் சவுக்கு வியா​பாரி ஆறு​மு​கம் ​(49) இறந்​தார். ​க ​ட​லூரை அடுத்த குடி​காடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் ஆறு​மு​கம். சவுககுத் தோப்​பில் மரங்​களை வாங்கி விற்​பனை செய்து வந்​தார். ​வெள் ​ளிக்​கி​ழமை காலை அவர் தனது மகன் தமி​ழ​ர​ச​னு​டன் ​(19) மோட்​டார் சைக்​கி​ளில் கட​லூரை அடுத்த கன்​னி​கோயி​லில் பெட்​ரோல் நிரப்​பச் சென்​றார். பெட்​ரோல் நிரப்​பி​விட்டு கட​லூர் திரும்​பு​கை​யில் மோட்​டார் சைக்​கிள் வேனு​டன் மோதி விபத்​துக்கு உள்​ளா​னது. ​இதில ஆறு​மு​க​மும்,​ தமி​ழ​ர​ச​னும் பலத்​தக் காயம் அடைந்​த​னர். இரு​வ​ரை​யும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னைக்​குக் கொண்டு வந்​த​னர். ம ​ருத்​து​வர்​கள் சோதித்​துப் பார்த்து ஆறு​மு​கம் இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​த​னர். தமி​ழ​ர​சன் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார்.

Read more »

லாரி மோதி மாண​வன் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ.27:​

சிதம்​ப​ரம் அருகே லாரி மோதிய விபத்​தில் பள்ளி மாண​வர் இறந்​தார். படு​கா​ய​ம​டைந்த மற்​றொரு மாண​வர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார். சி​தம்​ப​ரத்தை அடுத்த புவ​ன​கிரி அருகே உள்ள கீழ​ம​ணக்​குடி கிரா​மத்​தைச் சேர்ந்த சின்​ன​சா​மி​யின் மகன் சிவ​பா​லன் ​(16), இவ​ரும் புவ​ன​கி​ரி​யைச் சேர்ந்த சந்​தி​ர​நாத் ​(16) ஆகிய இரு​வ​ரும் அரசு ஆண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் படித்து வரு​கின்​ற​னர். வி​யா​ழக்​கி​ழமை மதி​யம் பெரு​மாத்​தூ​ரில் உள்ள ஹோட்​டல் ஒன்​றில் சாப்​பி​டு​வ​தற்​காக சைக்​கி​ளில் சென்​றுக் கொண்​டி​ருந்​த​னர்,​ அப்​போது சிதம்​ப​ரம் நோக்கி வந்த லாரி ஒன்று அவர்​க​ளது சைக்​கிள் மீது மோதி​யது.÷இவ் விபத்​தில் படு​கா​ய​ம​டைந்த மாண​வர் சிவ​பா​லன் மருத்​து​வ​ம​னைக்கு செல்​லும் வழி​யி​லேயே இறந்​தார். சந்​தி​ர​நாத் சிதம்​ப​ரம் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கி​றார். இது குறித்து புவ​ன​கிரி போலீ​ஸôர் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.

Read more »

கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் கவ​னத்​திற்கு

நெய்வேலி,​ நவ. 27: ​

விருத்​தா​ச​லம் வட்​டா​ரத்​தில் தற்​போது வட​கி​ழக்​குப் பரு​வ​மழை கார​ண​மாக கனத்த மழை பெய்​துள்​ளது.


இந்த கன​ம​ழை​யால் சம்பா நெற்​ப​யிர்​கள் வெவ்​வேறு நிலை​யில் பாதிக்​கப்​பட வாய்ப்​புள்​ளது. ம ​ழை​நீர் வடிந்த பின் பயிர்​கள் பாதிக்​கப்​ப​டும் நிலை​யில் கீழ்​கண்ட பரிந்​து​ரை​களை கடை​பி​டிக்​க​வேண்​டு​மென விருத்​தா​ச​லம் வேளாண் உதவ இயக்​கு​நர் இ.அன்​ப​ழ​கன் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.÷அ​தன்​படி சில பகு​தி​க​ளில் மழை​யால் சம்பா இள​ந​டவு பாதிக்​கப்​பட்டு பயிர்​கள் கரைந்து ஆங்​காங்கே திட்​டுத் திட்​டா​கக் காலி​யாக காணப்​ப​டும். நாற்​று​கள் கைவ​சம் இருப்​பின் அதே ரகத்​தைக் கொண்டு,​ பயி​ரைக் கலைத்து நடவு செய்து பயிர் எண்​ணிக்​கை​யைப் பரா​ம​ரிக்க வேண்​டும். நீர் தேங்​கி​யுள்ள வயல்​க​ளில் உட​ன​டி​யாக நீரை வடிக்க வாய்ப்​பில்​லா​மல் பயிர் பாதி​ய​ளவு நீரில் மூழ்​கி​யி​ருக்​கும் நிலை​யில் துத்​த​நா​கம்,​ தழைச்​சத்து இல்​லா​மல் பயிர் மஞ்​சள் மற்​றும் பழுப்பு நிற​மாக வாய்ப்​புள்​ளது. ஏக்​க​ருக்கு 2 கிலோ யூரியா,​ 1 கி.சிங்க்​சல்​பேட்,​ 200 லிட்​டர் நீரில் கலந்து கைத் தெளிப்​பான் உத​வி​யு​டன் பயிர்​க​ளின் இலை​யின் மீது உட​ன​டி​யாக தெளிக்​க​வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல்​வேறு ஆலோ​ச​னை​களை அன்​ப​ழன் தெரி​வித்​துள்​ளார்.

Read more »

6 மாத​மாக ஊதி​யம் இல்லை: பள்ளி துப்​பு​ரவு ஊழி​யர்​க​ள் வருத்தம்

கட​லூர்,​ நவ.27:​

கட​லூர் மாவட்​டத்​தில் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு ​​ கடந்த 6 மாத​மாக ஊதி​யம் கிடைக்​க​வில்லை. ​ த​மி​ழ​கம் முழு​வ​தும் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் உ.யர்​நிலை,​ மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பகு​தி​நே​ரம் மற்​றும் முழு​நே​ரப் பணி​யில் நிய​மிக்​கப்​பட்டு பணி​பு​ரி​கி​றார்​கள். நி​ரந்த ஊழி​யர்​க​ளுக்கு தடை​யின்றி ஊதி​யம் வழங்​கப்​பட்டு விடு​கி​றது. ஆனால் தாற்​கா​லிக ஊழி​யர்​க​ளா​கப் பணி​யில் இருப்​ப​வர்​க​ளுக்கு மாத ஊதி​யம் ரூ. 450தான். இநத ஊதி​ய​மும் இவர்​க​ளுக்கு உரிய நேரத்​தில் கிடைப்​பது இல்லை என்று புகார் தெரி​விக்​கி​றார்​கள். ​ க​ட​லூர் மாவட்​டத்​தில் 500-க்கும் மேற்​பட்ட துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​கி​றார்​கள். இவர்​க​ளுக்கு கடந்த 6 மாத​மாக ஊதி​யம் வழங்​கப்​பட வில்லை. ​ இது குறித்து கட​லூர் மாவட்​டக் கல்​வித் துறை​யில் விசா​ரித்​த​போது கிடைத்த தக​வல்:​ ​ தாற் ​கா​லிக துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு சில்​ல​றைச் செல​வி​னங்​கள் என்ற தலைப்​பில் நிதி ஒதுக்​கப்​ப​டு​கி​றது. மாநில வரவு செல​வுத் திட்​டத்​தில் இதற்​கான நிதி ஒதுக்​கப்​ப​டு​கி​றது. அந்த நிதி மாவட்​டங்​க​ளுக்கு இன்​ன​மும் வந்து சேர​வில்லை. நிதி வந்​த​தும் மொத்​த​மாக ஊதி​யம் வழங்​கப்​ப​டும். ​ ​ தாற்​கா​லி​க​மா​கப் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு அரசு வழங்​கும் மாத ஊதி​யம் ரூ. 450 கட்​டு​ப​டி​யா​காது. இந்த ஊதி​யத்​துக்கு யாரும் வேலைக்கு வர​மாட்​டார்​கள். எ​னி​னும் பல பள்​ளி​க​ளில் பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்க நிதி​யில் இருந்து கூடு​த​லாக ஒரு தொகையை மாதா​மா​தம் வழங்கி வரு​கி​றார்​கள். அரசு நிதி ஒதுக்​கீடு வரும்​போது அரசு சம்​ப​ளம் வழங்​கப்​பட்டு விடும். பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்​கத்​தில் நிதி இல்​லா​விட்​டால் ஊதி​யம் வழங்​கு​வது சிர​மம். ஆனால் ஆண்​டு​தோ​றும் இதே நிலை​தான் இருந்து வரு​கி​றது என்​றும் தெரி​வித்​த​னர்.

Read more »

ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் சவப்​பாடை ஊர்​வ​லம்

கட ​லூர்,​ நவ.27: ​

கட​லூ​ரில் பழு​த​டைந்து கிடக்​கும் சாலை​களை சீர​மைக்க வலி​யு​றுத்தி இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும்,​ ஆர்ப்​பாட்​ட​மும் நடத்​தி​னர். ​

ரூ. 44 கோடி​யில் தொடங்​கப்​பட்ட பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டம் 18 மாதங்​க​ளில் முடிக்​கப்​பட வேண்​டும். ஆனால் 30 மாதங்​க​ளுக்கு மேல் ஆகி​யும் முடி​வ​டைய வில்லை.

60 சதம் பணி​கள்​கூட நிறை​வ​டைய வில்லை. இத் திட்​டத்​துக்​காக தோண்​டப்​பட்ட பள்​ளங்​க​ளால் வாக​னப் போக்​கு​வ​ரத்து பெரி​தும் சிர​ம​மாக இருக்​கி​றது. சாலை​கள் குண்​டும் குழி​யு​மாக மாறி நடந்து செல்​வ​தற்​கும் லாயக்​கற்​ற​தாக மாறி​விட்​டது. இத​னால் விபத்​து​கள் ஏற்​ப​டாத நாளே இல்லை. ​÷எ​னவே பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டத்தை துரி​த​மாக நிறை​வேற்ற நட​வ​டிக்கை எடுக்​காத கட​லூர் நக​ராட்​சி​யைக் கண்​டித்து இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தி​னர் வெள்​ளிக்​கி​ழமை சவப்​பாடை ஊர்​வ​ல​மும் நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்ப்​பாட்​ட​மும் அறி​வித்து இருந்​த​னர். ச​வப்​பாடை ஊர்​வ​லத்​துக்கு போலீஸ் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. ​ ​ எனவே கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி வாலி​பர் சங்​கத்​தி​னர்,​ நக​ராட்சி அலு​வ​ல​கம் முன் ஆர்​பா​பட்​டம் நடத்​தி​னர்.÷அதே நேர்த்​தில் யாரும் எதிர்​பா​ராத வித​மாக,​ ஜன​நா​யக வாலி​பர் சங்​கத்​தைச் சேர்ந்த இளை​ஞர்​கள் சிலர் எங்​கி​ருந்தோ சவப்​பாடை ஒன்றை தயா​ரித்து எடுத்​துக் கொண்டு தப்​பட்​டை​கள் முழங்க நக​ராட்சி அலு​வ​ல​கத்​துக்கு வந்​து​விட்​ட​னர். அ​வர்​களை போலீ​ஸôர் பலர் தடுத்து நிறுத்த முன்​றும் முடி​ய​வில்லை. சவப்​பா​டை​யில் நக​ராட்சி அலு​வ​ல​கத்​தின் மாதிரி,​ தெர்​மா​கோல் அட்டை மூலம் செய்​யப்​பட்டு வைக்​கப்​பட்டு இருந்​தது. ​ச​வப்​பா​டை​யைக் கொண்​டு​வர போலீஸ் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்து,​ ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​ய​வர்​க​ளுக்​கும் போலீ​ஸô​ருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.÷ந​க​ராட்சி அலு​வ​லக வாயி​லுக்கு வந்​த​தும் சவப்​பா​டையை போலீ​ஸôர் பிய்த்து எறிந்​த​னர்.÷அ ​தைத் தொடர்ந்து ஆர்ப்​பாட்​டம் மீண்​டும் தொடர்ந்​தது. ஆர்ப்​பாட்​டத்​துக்கு இந்​திய ஜன​நா​யக வாலி​பர் சங்க கட​லூர் நக​ரச் செய​லா​ளர் ஆர்.அமர்​நாத் தலைமை தாங்​கி​னார். ந​கர நிர்​வா​கி​கள் ஆர்.மணி​வண்​ணன்,​ கே.பி.பாலு செந்​தில்​கு​மார்,​ ரஜி​னி​ஆ​னந்த்,​ தென்​ன​சன்,​ கார்த்​தி​கே​யன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர். மாவட்​டச் செய​லா​ளர் ராஜேஷ் கண்​ணன்,​ தலை​வர் எஸ்.அசோ​கன்,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

தனி​யார் ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்​வ​தாக புகார்

கட ​லூர்,​ நவ.27: ​

கட​லூர் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு கோயில் நிலத்தை ஆர்​ஜி​தம் செய்ய முயன்ற அதி​கா​ரி​களை ஊர் பொது​மக்​கள் தடுத்து நிறுத்​தி​னர். ​ ​

க​ட​லூர் அருகே சிப்​காட் பகு​தி​யில் தனி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலை தொடங்​கப்​பட இருக்​கி​றது. இதற்​காக சுமார் 1,000 ஏக்​கர் நிலம் ஏற்​கெ​னவே ஆர்​ஜி​தம் செய்ப்​பட்டு இருக்​கி​றது. மேற்​கொண்​டும் நிலம் கைய​கப்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. ​÷இந்​நி​லை​யில் இயற்கை எழில் மிகுந்த,​ மணல் குன்​று​கள் நிறைந்த திருச்​சோ​பு​ரம் பகு​தி​யில் நிலம் கைய​கப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் வெள்​ளிக்​கி​ழமை ஈடு​பட்​ட​னர்.÷நி ​லத்தை அளந்து பல இடங்​க​ளில் கொடி நட்டு இருந்​த​னர். இதற்கு அப் பகு​தி​யில் வசிக்​கும் மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். இத​னால் நில அள​வைத் துறை அலு​வ​லர்​க​ளுக்​கும் பொது​மக்​க​ளுக்​கும் இடையே கடும் வாக்​கு​வா​த​மும் தள்​ளு​முள்​ளும் ஏற்​பட்​டது. ​

மக்​கள் எதிர்ப்பு கார​ண​மாக நில​அ​ள​வைத்​துறை அதி​கா​ரி​கள் அங்​கி​ருந்து திரும்​பிச் சென்று விட்​ட​னர். ​

நி​லம் கொடுத்து மறுப்பு தெரி​வித்​தது குறித்து திருச்​சோ​பு​ரம் பிர​மு​கர் பாலு கூறி​யது:​ ​÷த ​னி​யார் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு திருச்​சோ​பு​ரம் கிரா​மத்​தில் நிலம் ஆர்​ஜி​தம் செய்ய நில அள​வைத்​துறை அதி​கா​ரி​கள் முயன்​ற​னர்.÷தி​ருச்​சோ​பு​ர​நா​தர் கோயி​லுக்​குச் சொந்​த​மான 30 ஏக்​கர் நிலத்தை அதி​கா​ரி​கள் எண்​ணெய் சுத்​தி​க​ரிப்பு ஆலைக்கு வழங்​கும் முயற்​சி​யில் இறங்கி உள்​ள​னர்.÷இந்த நிலத்​தில் சுமார் 10 ஏக்​க​ரில் 200-க்கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் வீடு​கட்டி வசிக்​கின்​ற​னர். நாங்​கள் வீடு​களை காலி செய்ய மாட்​டோம் என்று தெரி​வித்து விட்​டோம். ​

வீ​டு​கள் கட்டி இருக்​கும் 10 ஏக்​கர் உள்​ளிட்ட 30 ஏக்​கர் கோயில் நிலத்​தை​யும் தொழிற்​சா​லைக்கு ஆர்​ஜி​தம் செய்து கொடுக்​கும் முயற்​சி​யில் அதி​கா​ரி​கள் ஈடு​பட்டு இருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. கோயில் நிலத்தை தனி​யார் நிறு​வ​னத்​துக்கு அதி​கா​ரி​கள் எப்​படி வழங்க முடி​யும்?​ என்​றார் பாலு.

Read more »

நட​ரா​ஜர் கோயில் வழக்கு விசாரணை 6 வாரத்​துக்கு ஒத்திவைப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.27:​

சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை அரசு கையக்​கப்​ப​டுத்​தி​யது தொடர்​பாக புது​தில்லி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் மேல்​மு​றை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அம் மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் அல்​டா​மஸ்​க​பீர்,​ சிரி​யாஸ்​ஜோ​சப் ஆகிய நீதி​ப​தி​கள் கொண்ட பெஞ்சு முன்​னி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை விசா​ர​ணைக்கு வந்​தது.÷த​மி​ழக அரசு அற​நி​லை​யத்​துறை சார்​பில் சிறப்பு வழக்​க​றி​ஞர் அசோக்​தே​சாய்,​ மூத்த வழக்​க​றி​ஞர் மரி​ய​சுந்​த​ரம்,​ அரசு வழக்​க​றி​ஞர் நெடு​மா​றன் ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர். அரசு தரப்​பில் இந்து அற​நி​லை​யத்​துறை ஆணை​யர் சம்​பத்,​ செய​லர் முத்​து​சாமி ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர்.÷பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் வழக்​க​றி​ஞர் கே.கே.வேணு​கோ​பால்,​ சி.எஸ்.வைத்​தி​ய​நா​த​ஐ​யர்,​ குரு​கி​ருஷ்​ண​கு​மார்,​ சுப்​பி​ர​ம​ணி​ய​சாமி ஆகி​யோர் ஆஜ​ரா​னார்​கள். சி​வ​ன​டி​யார் உ.ஆறு​மு​க​சாமி,​ ஆலய மீட்​புக் குழு வி.எம்.எஸ்.சந்​தி​ர​பாண்​டி​யன் ஆகி​யோர் சார்​பில் வழக்​க​றி​ஞர்​கள் காலின்​கன்​சால்வ்ஸ்,​ பி.ஆர்.கோவி​லன்​பூங்​குன்​றம்,​ சி.ராஜூ ஆகி​யோர் ஆஜ​ரா​னார்​கள். மே​லும் இவ் வழக்​கில் ஆலய பாது​காப்பு குழு​வைச் சேர்ந்த டி.சிவ​ரா​மன்,​ குஞ்​சி​த​பா​தம்,​ கீதா உள்​ளிட்ட 5 பேர் தங்​க​ளை​யும் விசா​ரிக்க வேண்​டும் என மனு தாக்​கல் செய்​த​னர். வ​ழக்கை விசா​ரித்த நீதி​ப​தி​கள் அரசு தரப்​பு,​ சிவ​ன​டி​யார் ஆறு​மு​க​சாமி தரப்​பு மனுவை பொது​தீட்​சி​தர்​கள்,​ சுப்​பி​ர​ம​ணி​ய​சா​மி ஆகியோர் அடுத்த 2 வாரத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் அளிக்க வேண்​டும்.÷அது வரை எந்த உத்​தி​ர​வின்றி இவ்​வ​ழக்கு விசா​ரணை 6 வாரத்​திற்கு ஒத்தி வைப்​ப​தாக நீதி​ப​தி​கள் உத்​த​ரவு பிறப்​பித்​த​னர்.

Read more »

வெள்ளி, நவம்பர் 27, 2009

பஸ் நிறுத்​தத்துக்காக போராடும் பொதுமக்கள்

கட ​லூர்,​ நவ. 26:​

50 ஆண்​டு​க​ளாக இருந்து வந்த பஸ் நிறுத்​தம் அகற்​றப் ​பட்​ட​தால்,​ அதை மீண்​டும் பெறு​வ​தற்​காக நெல்​லிக்​குப்​பம் மக்​கள் நீண்ட போராட்​டத்தை நடத்தி வரு​கி​றார்​கள். ​ ​​ ​

பண்​ருட்டி-​கட​லூர் மார்க்​கத்​தில் நெல்​லிக்​குப்​பத்​தில் போலீஸ் லைன்,​ பிள்​ளை​யார் கோயில்,​ அஞ்​சல் நிலை​யம்,​ ஜான​கி​ரா​மன் நகர் ஆகிய பஸ் நிறுத்​தங்​க​ளும்,​ கட​லூர்-​ பண்​ருட்டி மார்க்​கத்​தில்,​ ஜான​கி​ரா​மன் நகர்,​ அஞ்​சல் நிலை​யம்,​ கடைத்​தெரு,​ ​ காவல்​நி​லை​யம்,​ போலீஸ் லைன் ஆகிய பஸ் நிறுத்​தங்​க​ளும் 50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இருந்து வந்​துள்​ளன. ​​ ​ ஓராண்​டுக்கு முன் ரூ.1 கோடி செல​வில் நெல்​லிக்​குப்​பத்​தில் பஸ் நிலை​யம் கட்​டப்​பட்டு,​ துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் திறந்து வைத்​தார். ஆனால் கடந்த ஓராண்​டாக பஸ் நிலை​யத்​துக்​குள் எந்த பஸ்​சும் வந்​து​போ​வது இல்லை. இந்த நிலை​யில் செப்​டம்​பர் மாதக் கடை​சி​யில்,​ நெல்​லிக்​குப்​பம் பஸ் நிலை​யத்தை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பார்​வை​யிட்டு பஸ் நிலை​யத்​துக்​குள் அனைத்து பஸ்​க​ளும் வந்து போக நட​வ​டிக்கை மேற்​கொண்​டார்.​ ​ அக்​டோ​பர் 1-ம் தேதி முதல் அனைத்து பஸ்​க​ளும் பஸ் நிலை​யத்​துக்​குள் வந்​து​போ​கின்​றன. பஸ் நிலை​யத்​துக்கு உள்ளே செல்​லும் வழி​யும்,​ வெளி​யே​றும் வழி​யும் ஒரே இடத்​தில் இருப்​ப​தா​லும்,​ பஸ் நிலைய வாயி​லில் எப்​போ​தும் பஸ்​கள் நிற்​கும் சூழ்​நிலை ஏற்​ப​டு​வ​தா​லும் பண்​ருட்டி-​ கட​லூர் நெடுஞ்​சா​லை​யில் வாக​னப் போக்​கு​வ​ரத்து நெரி​சல் தொடர்ந்து ஏற்​ப​டு​கி​றது.​ ​ இந்த நிலை​யில் பஸ் நிலை​யத்​தில் இருந்து,​ 500 மீட்​டர் தொலை​வில் உள்ள அஞ்​சல் நிலை​யம்,​ கடைத் தெரு ஆகிய இரு பஸ் நிறுத்​தங்​க​ளி​லும் பஸ்​கள் நிற்​கக் கூடாது என்று போலீ​ஸôர் அண்​மை​யில் உத்​த​ர​விட்டு உள்​ள​னர். ​​ ​ அஞ்​சல் நிலைய பஸ் நிறுத்​தத்​தில் இறங்​கித்​தான் 3 பள்​ளி​கள்,​ வங்​கி​கள்,​ எம்.எல்.ஏ. அலு​வ​ல​கம் உள்​ளிட்​ட​வற்​றுக்கு பொது மக்​கள்,​ மாணவ,​ மாண​வி​யர் செல்ல வேண்​டி​யது இருக்​கி​றது. பஸ் நிறுத்​தத்தை எடுத்து விட்​ட​தால் பொது மக்​கள் பஸ் நிலை​யத்​தில் இறங்கி நீண்​ட​தூ​ரம் நடந்தோ,​ ரூ.30க்கு மேல் செல​விட்டு ஆட்டோ ரிக்​ஷாக்​க​ளி​லோ​தான் செல்ல வேண்​டிய கட்​டா​யம் இருப்​ப​தாக பொது​மக்​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​ பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​க​ளும் பொது மக்​க​ளும் செல்ல வேண்​டும் என்ற கட்​டா​யத்​துக்​காக 50 ஆண்​டு​க​ளாக அனு​ப​வித்த வந்த,​ மக்​க​ளுக்கு வச​தி​யாக இருந்த பஸ் நிறுத்​தங்​களை ஏன் அகற்ற வேண்​டும் என்று கேட்​கி​றார்​கள் நெல்​லிக்​குப்​பம் பொது மக்​கள். மேலும் இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​கள் செல்​வ​தில்லை. எனவே பாது​காப்​பற்ற நிலை ஏற்​பட்டு உள்​ளது என்​றும் பொது மக்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​ பஸ் நிறுத்​தங்​கள் அகற்​றப்​பட்​ட​தைக் கண்​டித்து நெல்​லிக்​குப்​பம் நகர மக்​கள் இணைந்து உண்​ணா​வி​ர​தம்,​ 3 ஆயி​ரம் வீடு​க​ளில் கருப்​புக் கொடி என பல போராட்​டங்​களை நடத்தி உள்​ள​னர். மேலும் தொடர் போராட்​டங்​களை நடத்​த​வும் திட்​ட​மிட்டு உள்​ள​னர். மக்​கள் பிர​தி​நி​தி​க​ளு​டன் மாவட்ட நிர்​வா​கம் பேச்சு நடத்தி,​ பறிக்​கப்​பட்ட உரி​மையை மீண்​டும் வழங்க வேண்​டும் என்று பொது​மக்​கள் எதிர்​பார்க்​கி​றார்​கள்.

உரி​மை​ பறிப்​பு

இது​கு​றி​தது மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வி.உத​ய​கு​மார் கூறு​கை​யில்,​ "பஸ் நிலை​யம் செயல்​பட வேண்​டும் என்​ப​தில் கருத்து வேறு​பாடு இல்லை. ஆனால்,​ போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுத்து விட்​ட​தால் 6 நக​ராட்சி வார்​டு​க​ளைச் சேர்ந்த 20 ஆயி​ரம் மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். 3 பள்​ளி​கள்,​ பாரத ஸ்டேட் வங்கி,​ கோயில்​கள் திரு​மண மண்​ட​பங்​கள்,​ எம்.எல்.ஏ. அலு​வ​ல​கம் ஆகி​ய​வற்​றுக்​குச் செல்​வோர் பஸ் நிலை​யம் சென்று வர வேண்​டிய நிலை இருப்​ப​தால் பெரி​தும் அவ​திப்​ப​டு​கி​றார்​கள். 1000 மக்​கள் தொகை கொண்ட கிரா​மத்​துக்கு பஸ் வசதி செய்து கொடுக்​கும் அரசு,​ 20 ஆயி​ரம் மக்​கள் வசிக்​கும் பகு​திக்கு,​ 60 ஆண்​டு​க​ளாக பயன்​ப​டுத்தி வந்த பஸ் நிறுத்​தத்தை அகற்ற வேண்​டிய கட்​டா​யம் என்ன. போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுக்​கப்​பட்​ட​தால்,​ பஸ் நிலை​யத்​துக்​குள் வணிக வளர்ச்சி எது​வும் ஏற்​ப​டப் போவ​தில்லை. பஸ் நிறுத்​தத்தை அகற்​றி​யது மக்​க​ளின் அடிப்​படை உரி​மை​யைப் பறிப்​ப​தா​கும்' என்​றார் உத​ய​கு​மார்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதக் கடை ரூ.7.56 லட்சத்துக்கு ஏலம்

சிதம்பரம், நவ. 26:

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் 3-ம் பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்களில் பிரசாதக் கடை அமைத்து நடத்தவும், கிழக்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடை, மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய், பழக்கடை வைத்து நடத்தவும் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது.÷அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் முன்னிலையில் உதவி ஆணையர் ஆர்.ஜெகந்நாதன், செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், கே.சிவக்குமார் ஆகியோர் ஏலத்தை நடத்தினர்.÷பிரசாதக் கடை ஏலம் எடுக்க 12 பேர் டெபாசிட் கட்டி வந்தனர். தேங்காய் பழக்கடை ஏலம் எடுக்க 2 பேர் வந்திருந்தனர்.÷பிரசாதக் கடைக்கு தேவஸ்தானத்தின் குறைந்தபட்ச மதிப்பான ரூ.5 லட்சம் கேள்வியிலிருந்து ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்தொகையை உயர்த்தி கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலத்தொகை படிப்படியாக குறைக்கப்பட்டது. அப்போதும் ஏலத்தொகை ரூ.2 லட்சம் வரை ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. அதேபோன்று கிழக்கு நுழைவுவாயில் மற்றும் மேற்கு நுழைவு வாயிலில் தேங்காய் பழக்கடைகள் 2-க்கும் தேவஸ்தான மதிப்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து கேள்வி தொடங்கப்பட்டது. ரூ.20 ஆயிரம் வரை ஏலம் மதிப்பு குறைக்கப்பட்டு ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை.

பின்னர் டெண்டர் பெட்டியை திறந்ததில் ஆலயத்தின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயிலில் பிரசாதக் கடைகள் நடத்த ரூ.7.56 லட்சத்துக்கு புவனகிரி வடக்கு திட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் டெண்டர் போட்டிருந்தார். அதிகபட்ச தொகையாக அவர் டெண்டர் கோரியதால் அவருக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேங்காய் பழக்கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

Read more »

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் கட்டண முறை அமல்படுத்தப்படும்

சிதம்பரம், நவ. 26:

சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் விரைவில் அர்ச்சனை, சிறப்பு தரிசனம் மற்றும் அபிஷேகம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் விதிப்பது குறித்தும், பூஜை செய்பவர்களுக்கு எவ்வளவு பங்கு உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை அலுவலர்களால் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண விதிப்பு முறை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழா முதல் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ந.திருமகள் தெரிவித்தார்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


கோயிலில் வியாழக்கிழமை மேலும் 5 உண்டியல்கள் வைக்கப்படவிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்துக்குப் பிறகு நடராஜர் கோயிலில் மேலும் 5 உண்டியல்கள் வைக்கப்படும். தேங்காய் பழக்கடைகள் ஏலம் போகாததால் அறநிலையத் துறை சார்பில் அக்கடைகள் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆலயத்தில் பூஜை செய்யும் பொது தீட்சிதர்கள் ஆலய செயல் அலுவலர் அலுவலகத்தில் தங்களது பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என ந.திருமகள் தெரிவித்தார்

Read more »

இருந்தும் பயனில்லாத சிக்னல்: வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி, நவ. 26:

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் இரு சிக்னல்கள் இருந்தும், ஒன்று கூட எரியாததால் கடந்த இரு நாள்களாக வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், போக்குவரத்து போலீஸரும் அவதி அடைந்துள்ளனர்.

பண்ருட்டிக்கு வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் நகரின் மையப் பகுதியான காந்திசாலை, ராஜாஜி சாலை, சென்னை-கும்பகோணம் சாலை மற்றும் கடலூர் சாலையில் மளிகை, பாத்திரம், தங்க நகை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ளதால், நான்கு முனை சந்திப்பு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்து பரபரப்பாக காணப்படும்.÷மேலும் சென்னை-கும்பகோணம், கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலைகள் நான்கு முனை சந்திப்பில் சந்திக்கின்றன. இதனால் இச்சாலையில் வரும் வாகனங்கள் நான்கு முனை சந்திப்பைக் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.÷இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நான்கு முனை சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறுத்தப்பட்ட சிக்னல் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புதிதாக ஒரு சிக்னல் பொருத்தப்பட்டு அது பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பழைய சிக்னல் பராமரிப்பின்றி கை விடப்பட்டது.

இந்நிலையில் புதிய சிக்னல் இம்மாதம் 18-ம் தேதி திடீர் என செயல்படாமல் போனது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் சரி செய்யப்பட்ட புதிய சிக்னல் கடந்த இரு நாள்களாக மீண்டும் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸôர் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்ப படாத பாடுபடுகின்றனர்.

Read more »

300 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை

கட ​லூர்,​ நவ. 26:​

கட​லூர் அருகே தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 50-க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள்,​ இந்​திய கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ வியா​ழக்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன் ஆகி​யோர் சம்​பந்​தப்​பட்ட கிரா​மத்​துக்​குச் சென்று சமா​தா​னப் பேச்சு நடத்​தி​னர்.÷தா​ழங்​கு​டா​வைச் சேர்ந்த மீன​வர்​கள் 100 பேர் 20 பட​கு​க​ளில்,​ செவ்​வாய்க்​கி​ழமை,​ வங்​கக் கட​லில் வழக்​க​மாக மீன்​பி​டிக்​கும் பாறைப் பகு​தி​யில் வஞ்​ச​ரம் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​னர். காலை 10 மணி அள​வில் இந்​திய கடற்​ப​டை​யி​னர் ஒரு கப்ப​லில் அங்கு வந்​த​னர். அதில் இருந்து இறங்கி பட​கு​க​ளுக்கு வந்த சிப்​பாய்​கள்,​ மீன​வர்​களை அணுகி அடை​யாள அட்டை இருக்​கி​றதா பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு இருக்​கி​றதா 12 மைல் தூரத்​துக்கு அப்​பால் ஏன் வந்​தீர்​கள் என்று கேட்டு மிரட்டி,​ தடி​யால் சர​மா​ரி​யா​கத் தாக்​கி​னர். இதில் 50க்கும் மேற்​பட்ட மீன​வர்​கள் காயம் அடைந்​த​னர். ​÷பு ​தன்​கி​ழ​மை​யும் அதே பகு​தி​யில் மீன்​பி​டிக்​கச் சென்ற மீன​வர்​கள் இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் விரட்​டி​ய​டிக்​கப்​பட்​ட​னர். இத​னால் பாதிக்​கப்​பட்ட மீன​வர்​கள் ரூ. 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மதிப்​புள்ள வலை​களை அப்​ப​டியே போட்​டு​விட்டு கரை திரும்பி உள்​ள​னர். மீன் வலை​கள் கடற்​ப​டை​யி​ன​ரால் சேதப்​ப​டுத்​தப்​பட்டு இருக்​க​லாம் என்ற அச்​சம் மீன​வர்​கள் மத்​தி​யில் உள்​ளது. 3 நாள்​க​ளாக தாழங்​குடா மீன​வர்​க​ளுக்கு தொழில் தடை​பட்​டது. ​÷இச்​சம்​ப​வம் கட​லூர் மாவட்ட மீன​வர்​க​ளி​டையே கடும் அச்​சத்தை ஏற்​ப​டுத்தி இருக்​கி​றது. இத​னால் வியா​ழக்​கி​ழமை தாழங்​கு​டா​வைச் சேர்ந்த 300 பட​கு​க​ளில் 250 பட​கு​கள் மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை. இந்​தி​யக் கடற்​ப​டை​யின் செய​லுக்​குக் கண்​ட​னம் தெரி​வித்து சில வீடு​க​ளில் கருப்​புக் கொடி ஏற்​றப்​பட்டு இருந்​தது. கட​லூர் நக​ரில் சுவர்​க​ளி​லும் பஸ்​க​ளி​லும் கண்​ட​னச் சுவ​ரொட்​டி​கள் ஒட்​டப்​பட்டு இருந்​தன. மீன​வக் கிரா​மங்​கள் ஒன்​று​கூடி வியா​ழக்​கி​ழமை கூட்​டம் நடத்தி நட​வ​டிக்கை எடுக்​கத் திட்​ட​மிட்டு இருந்​த​னர். ​÷இந்த நிலை​யில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​ கட​லூர் எம்.எல்.ஏ. கோ.அய்​யப்​பன்,​ மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ் ஆகி​யோர் தாழங்​குடா கிரா​மத்​துக்​குச் சென்​ற​னர். அங்​குள்ள மீன​வர்​க​ளைச் சந்​தித்​துப் பேசி​னர். நடந்த சம்​ப​வத்​துக்கு கடற்​படை அதி​கா​ரி​கள் வருத்​தம் தெரி​வித்​த​தா​கக் கூறி​னர். எனி​னும் மீன​வர்​கள் சமா​தா​னம் அடை​ய​வில்லை. மீன​வர்​க​ளுக்​குக் கட​லில் மீன்​பி​டிக்க எல்லை வகுப்​பதை ஏற்க முடி​யாது என்று தெரி​வித்​த​னர். மேலும் மீன​வர்​க​ளுக்கு அடை​யாள அட்​டை​களை அர​சு​தான் வழங்க வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தி​னர். இந்​திய கடற்​ப​டையே எங்​களை அன்​னி​யர்​கள்​போல் தாக்​கு​வதை ஏற்க முடி​யாது என்​றும் கூறி​னர். ​

இப்​பி​ரச்​சினை தொடர்​பாக அனைத்து மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​க​ளு​டன் பேசு​வ​தாக மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்து விட்டு கட​லூர் திரும்​பி​னார்.​

Read more »

ஆட்​சி​யர் அறி​வுரை

​ கட​லூர்,​ நவ. 26:​

மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார்.

24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​னர். இத​னால் மீனவ மக்​க​ளி​டையே கொந்​த​ழிப்பு ஏற்​பட்​டது. எனவே வியா​ழக்​கி​ழமை மாலை மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​களை அழைத்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​÷க​டற்​படையினர் மீன​வர்​க​ளைத் தாக்​கக்​கூ​டாது என்று மீன​வர்​கள் கேட்​டுக் கொண்​ட​னர். சந்​தே​கப்​பட்​டால் மீன​வர்​க​ளைப் பிடித்து,​ கட​லூர் காவல் துறை​யி​ன​ரி​டம் ஒப்​ப​டைக்​க​லாம் என்​றும் கூறி​னர். கடற்​ப​டை​யி​ன​ரி​டம் இருந்து தங்​க​ளுக்​குப் பாது​காப்பு வேண்​டும் என்​றும் கோரி​னர்.÷இந்​திய இறை​யாண்​மைக்கு அச்​சு​றுத்​தல் ஏற்​பட்டு இருப்​ப​தா​லேயே நாட்டு நலன் கருதி கடற்​ப​டை​யி​னர் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கி​றார்​கள் என்று மீன​வர்​க​ளி​டம் எடுத்​துக் கூறப்​பட்​டது. அவர்​க​ளும் ஏற்​றுக் கொண்​ட​னர். அனைத்து மீன​வர்​க​ளுக்​கும் விரை​வில் அடை​யாள அட்டை வழங்க மீன்​வ​ளத் துறைக்கு உத்​த​ர​வி​டப்​பட்டு இருக்​கி​றது.÷மீ​ன​வர் அடை​யாள அட்டை வழங்​கும் வரை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை மீன​வர்​கள் எடுத்​துச் செல்​லு​மாறு அறி​வு​றுத்​தப்​பட்டு இருக்​கி​றது. மீன​வர்​கள் அச்​ச​மின்றி மீன் பிடிக்​கச் செல்​ல​லாம் என்​றார் ஆட்​சி​யர்.÷கூட் ​டத்​தில் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன்,​ கட​லூர் நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மீன் வளத்​துறை உதவி இயக்​கு​நர் அறி​வு​மதி,​ மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் சுப்​பு​ரா​யன்,​ ஏகாம்​ப​ரம்,​ குப்​பு​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

மார்க்​சிஸ்ட் கண்​ட​னம்

​ கட​லூர்,​ நவ. 26:​

கட​லூர் மீன​வர்​களை இந்​தி​யக் கடற்​படை தாக்​கி​ய​தற்கு மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது. ​

அக்​கட்​சி​யின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் டி.ஆறு​மு​கம் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லில் மீன்​பி​டிக்​கச் சென்ற தாழங்​குடா மீன​வர்​கள் 50க்கும் மேற்​பட்​ட​வர்​களை இந்​திய கடற்​ப​டை​யி​னர் தாக்கி உள்​ள​னர். மீன்​க​ளை​யும் வலை​க​ளை​யும் விட்​டு​விட்டு தப்​பிப் பிழைத்​துக் கரை சேர்ந்து உள்​ள​னர். இத் தாக்​கு​தலை மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி வன்​மை​யா​கக் கண்​டிக்​கி​றது. மத்​திய அரசு உடனே தலை​யிட்டு மீன​வர்​க​ளின் வாழ்​வா​தா​ரங்​க​ளை​யும்,​ உரி​மை​க​ளை​யும்,​ பாது​காக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​÷மத்​திய அரசு கொண்​டு​வர இருக்​கும் கடல் மீன் தொழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தில் மீன​வர்​க​ளின் உரி​மை​க​ளைக் கடு​மை​யா​கப் பாதிக்​கும் பல்​வேறு சரத்​து​கள் இடம்​பெற்று உள்​ளன. இச்​சட்​டம் நடை​மு​றைக்கு வரும் முன்பே கட​லோ​ரக் காவல் படை​யி​னர் அத்​து​மீறி முறை​யான விசா​ர​ணை​யின்றி,​ மீன​வர்​க​ளைத் தாக்கி இருப்​பது வேதனை அளிக்​கி​றது. ​

க​டல் வளத்​தை​யும்,​ மீனவ மக்​க​ளின் உரி​மை​க​ளை​யும் வாழ்​வா​தா​ரத்​தை​யும் பாதிக்​கும் கடல் மீன் தொழில் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை எதிர்த்​துக் குரல் கொடுக்க அனைத்​துப் பகுதி மக்​க​ளும் அணி திரள வேண்​டும் என்று கேட்​டுக் கொள்​கி​றோம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

Read more »

ரூ.500 லஞ்​சம்: அரசுப் பள்ளி ஆசி​ரி​யர் கைது

​ கட​லூர்,​ நவ. 26:​

ரேஷன் கார்டை ஆய்வு செய்​வ​தற்கு ரூ.500 லஞ்​சம் வாங்​கி​ய​தாக,​ அர​சுப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை ​(49) வியா​ழக்​கி​ழமை கைது செய்​யப்​பட்​டார். ​

க​ட​லூர் மாவட்​டத்​தில் உரிய முக​வ​ரி​யில் இல்​லாத குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளின் கார்​டு​கள் போலிக் கார்​டு​கள் என்று கண்​ட​றி​யப்​பட்டு,​ விசா​ர​ணை​யில் வைக்​கப்​பட்டு உள்​ளன. இந்​தக் கார்​டு​க​ளின் உண்​மைத் தன்மை கண்​ட​றிய ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கி​றது. இப்​ப​ணி​யில் ஆசி​ரி​யர்​க​ளும் ஈடு​ப​டுத்​தப்​பட்டு உள்​ள​னர்,​ கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் அர​சி​னர் மக​ளிர் மேல்​நி​லைப் பள்ளி ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை​யும் இப்​ப​ணி​யில் அமர்த்​தப்​பட்டு இருந்​தார்.÷அ ​வர் கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் சின்​ன​வா​ணி​யர் தெரு​வில் கடை வைத்து இருக்​கும்,​ நேமி​சந்த் ஜெயின் ரேஷன் என்​ப​வ​ரின் ரேஷன் கார்டை புதுப்​பிக்க ரூ.500 லஞ்​சம் கேட்​டா​ராம். மேலும் அவ​ரது கடை​யில் உள்ள ஸ்டே​ஷ​னரி பொருள்​க​ளை​யும் இல​வ​ச​மா​கப் பெற்​றுச் சென்​றா​ராம்.

இ ​து​கு​றித்து நேமி​சந்த் ஜெயின் கட​லூர் மாவட்ட லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸ​ரி​டம் புகார் செய்​தார். லஞ்ச ஒழிப்​புப் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் வேத​ரத்​தி​னம் வழக்​குப் பதிவு செய்து,​ ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் என்ற சூசை​யைக் கையும் கள​வு​மா​கப் பிடிக்க உத்​த​ர​விட்​டார். வியா​ழக்​கி​ழமை ஆசி​ரி​யர் மணி​ரத்​தி​னம் தனது வீட்​டில் இருந்​தார் அவ​ரி​டம் நேமி​சந்த் ஜெயின் ரூ.500 லஞ்​சம் கொடுக்​கும்​போது,​ மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸôர் விரைந்து சென்று கைது செய்​த​னர்.

Read more »

குடும்ப வன்​முறை வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு

கட ​லூர்,​ நவ. 26:​

குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில்,​ விரை​வில் தீர்வு காண வேண்​டும் என்று கட​லூ​ரில் நடந்த பெண்​க​ளுக்கு எதி​ரான வன்​முறை எதிர்ப்பு மாநாட்​டில் கோரிக்கை விடப்​பட்​டது.÷

அ​னைத்​ திந்​திய ஜன​நாய மாதர் சங்​கம் சார்​பில் இந்த மாநாடு கட​லூ​ரில் புதன்​கி​ழமை நடந்​தது. மாநாட்​டில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​÷

கு டும்ப வன்​முறை சட்​டம் 2005-ல் அம​லுக்கு வந்​தது. 2007 முதல் இது​வரை தொட​ரப்​பட்ட வழக்​கு​க​ளில் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​ட​வில்லை. எனவே குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளில் விரை​வில் தீர்வு காண நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​

வி​ருத்​தா​ச​லம் வட்​டம் ஆவட்​டி​யில் இளம் பெண் கலைச்​செல்வி,​ குடும்ப வன்​மு​றை​யால் எரித்​துக் கொல்​லப்​பட்​டார். இது​வரை குற்​ற​வாளி கைது செய்​யப்​ப​டா​தது கண​டிக்​கத் தக்​கது. விரை​வில் குற்​ற​வா​ளி​யைக் கைது செய்ய வேண்​டும். கட​லூர் மாவட்​டத்​தில் சிறு​மி​யர் மீதான பாலி​யல் பலாத்​கார சம்​ப​வங்​கள் அதி​க​ரித்து வரு​வது கவலை அளிக்​கி​றது. இது​கு​றித்து போலீ​ஸôர் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். சிறு​வர் மீதான வன்​கொ​டுமை தடுப்​புச் சட்​டம் குறித்து மக்​க​ளி​டையே விழிப்​பு​ணர்வை ஏற்​ப​டுத்த வேண்​டும் என்று கோரும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப் பட்​டன.÷மா ​நாட்​டுக்கு அனைத்​திந்​திய ஜன​நாய மாதர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் வி.மேரி தலைமை தாங்​கி​னார்., மாவட்ட நிர்​வா​கி​கள் எம்.மனோ​ரஞ்​சி​தம்,​ பி.சிவ​காமி,​ எஸ்.லட்​சுமி எஸ்.சந்​திரா உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். ​ ​

மா​வட்ட ஊராட்​சித் தலைவி இரா.சிலம்​புச்​செல்வி தொடங்கி வைத்​துப் பேசி​னார். குடும்ப வன்​முறை தொடர்​பான வழக்​கு​க​ளைத் தொகுத்து மாவட்​டத் தலை​வர் எஸ்.வாலண்​டீனா பேசி​னார். மாநி​லச் செய​லா​ளர் ஜோதி​லட்​சுமி,​ சக்கி குடும்ப நல ஆலோ​சனை மைய நிர்​வாகி கோடீஸ்​வ​ரன்,​ சிதம்​ப​ரம் நக​ராட்​சித் தலை​வர் பெüஜி​யா​பே​கம்,​ கோண்​டூர் ஊராட்சி மன்​றத் தலை​வர் சுஜாதா ராமச்​சந்​தி​ரன் உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior