சிறுபாக்கம் :
சிறுபாக்கம் பகுதிகளில் வேகமாக பரவி வரும் பார்த்தீனியம் விஷ செடிகளால் மக்கள் தோல் வியாதிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிறுபாக்கம் அதனை சுற்றியுள்ள அரசங்குடி, எஸ்.புதூர், மங்களூர், அடரி உள்ளிட்ட ஐம்பதுக் கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக வயல் வெளி மற்றும் காலி இடங்களில் பார்த்தீனியம் விஷ செடிகள் வளர்ந்து வருகின்றன. இதன் பூக்கள் மற்றும் இலைகள் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் உரசும் போது ஆரம்பத்தில் கடுமையான எரிச்சலுடன் அரிப்பு ஏற்படுகிறது. சில நாட்களில் உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றி, நாளடைவில் விஷக்கடி போன்று (அலர்ஜி) மாறுகிறது. பாதிக்கப்படும் கிராம மக்கள் உள்ளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல்வேறு நகர்ப் புற மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகளவு பரவி வரும் பார்த்தீனிய விஷ செடிகளால் கிராம மக்களை அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த செடிகளை அழிக்க வேளாண் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக