கடலூர் :
கடலூர், சிதம்பரத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவக்கியது.
கடலூர் நகரம், நெல்லிக்குப்பம் நகரம் மற்றும் கடலூர் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் நேற்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனுக்களை மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் முன்னிலையில் தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் வளர்மதி பெற்றுக் கொண்டார். அப்போது மாவட்ட மேற்பார்வையாளர்களாக எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் செல்வம், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராஜகோபாலன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் நடராஜன், அச்சரப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., பூவராகமூர்த்தி செயல் பட்டனர். இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி இருந்தால் அவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.
சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,வில் நகரம், ஒன்றியம், பேரூராட்சிகளுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று 5 இடங்களில் நடந்தது. சிதம்பரம் கீழவீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நகர பொறுப் பாளர்கள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு தேர்தல் பார் வையாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமை தாங்கினார். தேர்தல் பொறுப்பாளர் திருவள்ளூர் மாவட்ட பேரவை செயலாளர் ரமணன் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், புவனகிரி எம்.எல்.ஏ.,செல்வி ராமஜெயம், வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று அண்ணாமலை நகர் பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு கட்சியினர் மனு தாக்கல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக