பண்ருட்டி :
பண்ருட்டி ஹஜரத் நூர் முகமது அவுலியா தர்கா நிர்வாக கமிட்டியின் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியில் பயின்ற 50 மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு நிர்வாக கமிட்டி தலைவர் தாஜீதீன் தலைமை தாங்கி பயிற்சி மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். செயலாளர் முகமதுகுத்தூஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஷேக்பாஸித், துணை செயலாளர் ஹபிபுன்னிசா, உறுப்பினர்கள் ஷர்மிளா மற்றும் வக்பு வாரிய கண்காணிப்பாளர் முகமது இஸ்மாயில்,ஆய்வாளர் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக