கடலூர் :
காப்பீட்டு திட்டத்திற்கு கோடிக் கணக்கில் செலவு செய்யும் மருத்துவத் துறையில் நாய்க் கடிக்கு மருந்து இல்லை என சி.ஐ.டி.யூ., மாநில பொதுச் செயலாளர் பேசினார்.
கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., மாநில மாநாடு நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் சவுந்தரராசன் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு எந்த சலுகைகளையும் செய்யவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி போக்குவரத்து தொழிலாளர்கள் திருடுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். பெரிய திருட்டை மறைக்க கருணாநிதி இது போன்று கூறுகிறார். சாதாரணமாக வாழ 50 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என கூறி எம்.எல்.ஏ.,க்களுக்கு மாத சம்பளமாக 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய முதல்வர் கருணாநிதி, டேங்க் ஆபரேட் டர்களுக்கு 480 ரூபாய், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மூவாயிரம், சத்துணவு ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் என சம்பளம் வழங் குகிறார்.
அரசின் இலவச திட்டங்கள் அனைத்தும் டாஸ்மாக் வருவாயிலிருந்துதான் வழங்கப்படுகிறது. இந்தாண்டு 12 ஆயிரம் கோடி விற்பனை இலக் காக நிர்ணயித்துள்ளனர். தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தால் தனியார் மருத்துவமனை முதலாளிகளுக்குதான் லாபம். காப்பீட்டு திட் டத் திற்கு கோடிக் கணக்கில் செலவு செய்யும் மருத்துவத் துறையில் நாய்கடிக்கு ஊசியில்லை.
சில தினங்களுக்கு முன் என் மகனை நாய் கடித்து விட்டது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் ஒரு ஊசி போட் டுவிட்டு மேலும் இரண்டு ஊசியை வெளியே வாங்கி போட்டுக் கொள்ளுமாறு கூறினர். இந்த அளவிற்கு சுகாதாரத்துறை உள்ளது. நடந்து முடிந் துள்ள இடைத்தேர்தல்களில் தி.மு.க., விலை கொடுத்து வெற்றியை வாங்கியுள்ளது. இது தி.மு.க.,வினர் பலவீனத்தையே காட்டுகிறது.
தமிழகத்தில் குறைந்த பட்ச கூலி, 8 மணி நேர வேலை உத்தரவாதம், தொழிற்சங்க உரிமை, விலைவாசி உயர்வை கட்டுபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 9ம் தேதி 100 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு சவுந்தரராசன் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக