உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

ரூ.17.45 லட்சம் கையாடல் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது

கோவை: 

             கூட்டுறவு வங்கியில் 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, அதன் செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
                 சூலூர் அருகே கரவழி மாதப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சார்பதிவாளர்(குற்றவியல்)செந்தில்குமார் கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில், 2001, ஏப்.,9 முதல் 2009, பிப்.,11 வரையிலான காலத்தில் வங்கிக் கணக்கில் இருந்து 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இம்மோசடி குறித்து, கோவை வணிகக் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் தரப்பட்டது. டி.எஸ்.பி.,முத்துச்சாமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்.ஐ., நிர்மலாதேவி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பிக்சட் டிபாசிட் பத்திரங்களுக்கு பதிலாக போலி பத்திரங்கள் வழங்கி, பணம் வசூலித்தது, சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பணம் வழங்கியதாக செலவு கணக்கில் எழுதி வங்கி இருப்பை குறைத்து காட்டியது, வங்கி உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று, கேட்ட தொகையை விட அதிகமான தொகையை எடுத்தது, உறுப்பினர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்தது என 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது.
 
                  தீவிர விசாரணைக்குப் பின் வங்கி செயலாளர் நாச்சிமுத்து(56)கைது செய்யப்பட்டார். ஜே.எம். எண்:4 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட வங்கிச் செயலாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior