உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

மும்பை லாரியில் எரிசாராயம்? சோதனைக்கு பின் விடுவிப்பு

 கடலூர் : 

             மும்பை லாரியில் எரிசாராயம் கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் கடலூரில் இரண்டு டேங்கர் லாரிகளை போலீசார் சோதனை செய்தனர்.
 
            மும்பை பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகளில் எரிசாராயம் கடத்திக் கொண்டு கடலூர் வழியாக செல்வதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி., உத்தரவின் பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் புதுச்சேரி வழியாக கடலூர் நோக்கி வந்த மும்பை பதிவெண் கொண்ட இரண்டு டேங்கர் லாரிகளை அண்ணா பாலம் அருகே மடக்கி நிறுத்தினர். பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேரில் சென்று லாரியை சோதனை செய்ததில் ஏதும் கடத்தப்படவில்லை என தெரியவந்தது. மேலும் விசாரணையில் எம்.எச்04 பிஜி 5730 எண்ணுள்ள லாரியில் முப்பையில் காஸ் நிரப்பி சென்னை சி.பி.சி.எல்., கம்பெனியில் இறக்கி விட்டு நாகூர் செல்வதாகவும், மற்றொரு எம்.எச்.04 சிஏ 7080 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரி மும்பையிலிருந்து கெமிக்கல் ஏற்றி பெங்களூருவில் இறக்கி விட்டு காலி லாரியுடன் மீண்டும் கெமிக்கல் ஏற்ற சிப்காட் செல்வது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும் போலீசார் விடுவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior