விருத்தாசலம் :
விருத்தாசலத்தில் நடந்துவரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பல லட்சம் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., கேபிள் கள் சேதமடைந்தன. இதனால் நகரில் பெரும்பாலான தொலைபேசிகள் செயலிழந்தன.
விருத்தாசலத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வருகிறது. அதில் ஜங்ஷன் ரோடு மற்றும் கடலூர் சாலையில் உள்ள கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் மற்றும் கடை படிக்கட்டுகளை பொக்லைன் கொண்டு இடித்து அகற்றப்படுகிறது. அவ்வாறு ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் நோண்டியபோது மண்ணின் அடியில் புதைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., கேபிள் கள் 40ம் மேற்பட்ட இடங்களில் துண்டாகி சேதம் அடைந்தது. இதனால் ஜங்ஷன் ரோடு, கடைவீதி, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் 500 ம் மேற்பட்ட போன்கள் இயங்கவில்லை. நோண்டப்படும் மண் உடனடியாக அப்புறப்படுத்தாமல் அப்படியே கிடப்பதால் கேபிள்களை உடனடியாக இணைக்க முடியாத நிலை உள்ளது. கடந்த முறை ஆக்கிரமிப்புகளை அகற்றும் போதும் இதுபோல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டு போன்கள் இயங்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக