குறிஞ்சிப்பாடி :
செம்மை நெல் சாகுபடியால் எக்டேருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ கூடுதலாக விளைச்சல் கிடைப்பதாக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.
கடலூர் மாவட்டம், வடலூரில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்து வேளாண் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது: விவசாய துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதிலும், பல சலுகைகளை அறிவிப்பதிலும் முதல்வர் ஆர்வம் காட்டி வருகிறார். செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கடலூர் மாவட்டத்தில் 64 ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு எக்டேருக்கும் 2,500 கிலோ நெல் கூடுதலாக கிடைத்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு துள்ளிய பண்ணை திட்டத்தில் வழங்கி வந்த 50 சதவீத மானியத்தை தற்போது 65 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. ஜெ., ஆட்சியில் கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான 745 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் கரும்புக்கு ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் டன் கரும்பிற்கு ஆயிரத்து 14 வழங்க அறிவிப்பு மட்டும் தான் வந்தது. ஆனால் வழங்கவில்லை. கருணாநிதி ஆட்சியில் தான் கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரத்து 520 ரூபாய் வழங்கப்படுகிறது. நெல் குவிண்டால் (சாதாரண ரகம்) ஆயிரத்து 50 ரூபாய், சன்ன ரகம் ஆயிரத்து 100 ரூபாய் வழங் கப்படுகிறது என்றார். விழாவில், பத்திரப்பதிவு தணிக்கை அதிகாரி ஜெயவேல், துணைப்பதிவாளர் சுந்தரேசன், தாசில்தார் பெரியநாயகம், வடலூர் வட்டார மருத்துவ அதிகாரி லட்சுமி சீனுவாசன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக