கடலூர் :
விலைவாசி உயர்வை கட்டுபடுத்தக் கோரி சி.ஐ.டி.யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்சக் கூலி, 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். நிரந்தர பணிகளில் கான்ட்ராக்ட், அப்ரன்டீஸ் முறையை அனுமதிக்க கூடாது. நல வாரியத்தில் பதிவு செய்ய தற்போதுள்ள வி.ஏ.ஓ., சரிபார்த்தல் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைத் தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கருப்பையன், மாநிலக் குழு ஸ்ரீதர் கோரிக்கைகள் குறித்து பேசினர். பொருளாளர் பழனிவேல், இணை செயலாளர்கள் முத்துக்குமரன், ராஜி, குமார், சிப்காட் செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக