உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

வடலூரில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு : ரூ.7 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குறிஞ்சிப்பாடி : 

            வடலூரில் சார்பதிவாளர் புதிய கட்டட திறப்பு விழாவில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
 

               வடலூரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எம்.பி., அழகிரி, கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பதிவாளர் வேலாயுதம் வரவேற்றார். புதிய அலுவலகத்தை வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர், திருமண பதிவை துவக்கி வைத்து வேளாண் துறை சார்பில் அமைத்திருந்த  கண்காட் சியை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார். விழாவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் 7 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், நான் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்த போது, முதல்வரிடம் அனுமதி பெற்று இந்த அலுவலகம் கட் டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வருவாய் ஈட்டுவதில் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தற்போது குறிஞ்சிப்பாடி தாலுகாவாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த அரசில் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.  முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பசியிலிருந்து பிணி வரை களைவதற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். விழாவில் வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுணன், வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், கடலூர் சேர்மன் தங்கராசு, மாவட்ட விற்பனை குழு தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior