உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

விபத்து இழப்பீடு வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி

பண்ருட்டி : 

             இழப்பீட்டு தொகை வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த 10.2.2006 அன்று மோட்டார் சைக்கிளில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே சென்றபோது அரசு விரைவு பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பாக வேல்முருகனின் மனைவி குணசுந்தரி, தந்தை சிதம்பரம், தாய் புஷ்பவதி ஆகியோர் இழப்பீடு தொகை கோரி பண்ருட்டி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
              வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டு தொகையாக 2.91 லட்சம் ரூபாயை அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 27.7.2007ம் தேதி உத்தரவிட்டார். ஆனால் நஷ்ட ஈடு வழங்காததை தொடர்ந்து குணசுந்தரி பண்ருட்டி சப் கோர்ட்டில் முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி கலியமூர்த்தி, விபத்து இழப்பீட்டு தொகை வழங்காத அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு வந்த அரசு விரைவு பஸ்சை கோர்ட் அமீனா பன்னீர்செல்வம் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior