உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

பண்ருட்டியில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் : ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிருஷன் பேட்டி

பண்ருட்டி : 

                 விழுப்புரம்-மயிலாடுதுறை பாதையில் பயணிகள் ரயில் ஓடத் துவங்கிய பிறகு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளர் தீபக்கிரீசன் கூறினார். விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணியை புதிதாக பொறுப்பேற்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரீசன் நேற்று ஐந்து பெட்டிகள் இணைத்த சிறப்பு ரயிலில் வந்து ஆய்வு செய்தார்.
 
           காலை 11.35 மணிக்கு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பொது மேலாளரை மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண் முகம் தலைமையில், செயலாளர் வீரப்பன், மதன்சந்த், ரோட்டரி சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், வக் கீல் வடிவேலன், சிவிக் எக்ஸனோரா பசுபதி, மதன்சந்த், அசோக்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.  அதில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டும். விழுப்புரம்-விருத்தாசலம் வழியாக மதுரை செல்லும் 9 ரயில்களில் 3 ரயில்களை விழுப்புரம்-மயிலாடுதுறை பாதையில் திருப்பி விட வேண்டும். பண்ருட்டி ரயில்வே ஸ்டேனில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பொதுமேலாளர் தீபக்கிருஷன், ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கினால் விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதையில் ரயில் இயக்க முடியும். மார்ச் மாதத் திற்குள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கிய பிறகு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் முன் பதிவு மையம் துவங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் 11.45 மணிக்கு சிறப்பு ரயிலில் கடலூர் நோக்கி சென்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior