உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

காஸ் வினியோகத்தில் பிரச்னை : ஏஜென்சிகள் மீது நடவடிக்கை

பண்ருட்டி : 

              வீட்டு இணைப்புகளுக்கு காஸ் சப்ளை சீராக வழங்கவில்லை எனில் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தஞ்சாவூர் மண்டல மேலாளர் எச்சரித்துள்ளார்.
 
         பண்ருட்டியில் ஜெயா காஸ் ஏஜென்சி மூலம் 17ஆயிரம் இணைப்புகளுக்கு சிலிண்டர் வழங் கப்பட்டு வருகிறது. இந் நிலையில் சிலிண்டர் சரிவர வழங்காததால் கடந்த வாரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ஏஜென்சி மீது பாரத் பெட்ரோலியம் தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் தஞ்சாவூர் மண்டல மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர் முத்துசாமி ஆகியோர் நேற்று பண்ருட்டியில் உள்ள ஜெயா காஸ் குடோன் மற் றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் மண்டல மேலாளர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறுகையில், நுகர் வோரின் பல்வேறு புகார்களையடுத்து சிலிண்டர்  சப்ளை குறித்து குடோன் மற்றும் அலுவலகத்தில் ஆய்வு செய்துள்ளோம். முறைப்படி நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்கவில்லை. ஜெயா காஸ் உரிமையாளர் நுகர்வோருக்கு சீராக சிலிண்டர் சப்ளை செய்வதற்கு பதிவு முறைகள், வீடுகளுக்கு டோர் டெலிவரி வழங்க 2 அல்லது 3 வாரங்களுக்குள் தீர்வு காணவேண்டும். இல்லையெனில் ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior